Header Ads



ஏற்றிச்செல்லாத பஸ்களை கண்டித்து A -9 வீதியை மறித்து போராட்டம்


- சண்முகம் தவசீலன் -


முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட  பனிக்கன்குளம், கிழவன்குளம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த சுமார் 60 க்கும் மேற்பட்ட மாணவர்கள் மாங்குளம் மகா வித்தியாலயத்தில் கல்விக் கற்று வருகின்றனர்


இந்த கிராமங்களுக்கும்  பாடசாலைக்கும்  இடையில் சுமார் பத்து  கிலோ மீற்றர் தூரமாகும். ஏ -9 வீதியூடாக  போக்குவரத்து சேவைகள் பர இடம்பெறுகின்ற போதும் இந்த பாடசாலை மாணவர்களுக்கான சேவையை வழங்குவதில் பேருந்து சாரதிகள், நடத்துனர்கள் சரியாக செயல்படவில்லை என மக்கள் தொடர்ச்சியாக குற்றம் சுமத்தி வருகின்றனர்


மாணவர்கள் வீதியில் நிற்று பேருந்தை மறிக்கும்  போதும் அவர்களை ஏற்றாது  செல்கின்ற அரச மற்றும் தனியார் பேருந்துகளால் மாணவர்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு பாடசாலைக்கு உரிய நேரத்திற்கு செல்லவும் பாடசாலையிலிருந்து மீண்டும் உரிய நேரத்திற்கு வீடு திரும்பவும் முடியாத நிலைமையில் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்


மாணவர்களை மாத்திரமன்றி குறித்த கிராமங்களில் இருந்து மாங்குளம் நகரத்துக்குச் செல்கின்ற பொதுமக்கள், வயோதிபர்கள் மற்றும் நோயாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் பேருந்துகள்  ஏற்றிச் செல்லாத காரணத்தினால் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்


பாடசாலையில் பரீட்சைக்கு செல்ல வேண்டிய நிலையில் மாணவர்கள் 6.40 மணிமுதல் வீதியில் நின்றிருந்தனர். 8 மணியை கடந்தும் பேருந்துகள் எவையும் ஏற்றிச் செல்லவில்லை அதனையடுத்து மாணவர்களுடன் பெற்றோரும் நலன்விரும்பிகளும் இணைந்து  ஏ_9 வீதியை மறித்து போராட்டம் நடத்தினர்


 சம்பவ இடத்திற்கு வருகை தந்த மாங்குளம் பொலிஸார் வீதியை திறந்து விடுமாறு கோரிக்கை விடுத்ததுடன் இது தொடர்பில் வந்து முறைப்பாடு பதிவு செய்யுமாறும்  கேட்டுகு்கொண்டனர். அதன் பின்னர் நீதிமன்றம் ஊடாக நடவடிக்கை எடுப்பதாகவும்  பொலிஸார் உறுதியளித்தனர். அதன் பின்னரே அங்கிருந்து மக்கள் கலைந்து சென்றனர்.

No comments

Powered by Blogger.