Header Ads



வீடுகள் சேதமான 74 எம்.பிக்களில் 30 பேர் மட்டுமே இழப்பீடு கோரியுள்ளனர்


கடந்த மே மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைகளின் போது முழுமையாக எரியூட்டப்பட்ட வீடுகளுக்கு முழுமையான நட்டஈடுகளை பெற்றுக் கொள்வதற்காக முப்பது பாராளுமன்ற உறுப்பினர்களே இதுவரை விண்ணப்பங்கள் மற்றும் மதிப்பீட்டு அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளதாக ஆளும் கட்சி உறுப்பினர்கள் கூட்டத்தில் தெரிய வந்துள்ளது.


கடந்த மே மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறையின் போது 74 பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் எரிக்கப்பட்டன அல்லது தாக்கப்பட்டன. எவ்வாறாயினும் 44 பாராளுமன்ற உறுப்பினர்கள் இதுவரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவில்லை என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குழுக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.


பாராளுமன்றத்தில் உள்ள அரசாங்கக் கட்சி அலுவலகத்தில், வழக்கறிஞர்கள் சேத மதிப்பீடு அறிக்கைகளைத் தயாரிக்கின்றனர். வீடுகள் தீப்பிடித்து எரிந்த எம்.பி.க்கள் தங்களது மதிப்பீட்டு அறிக்கைகளுடன் வெள்ளிக்கிழமைக்கு முன் (09ஆம் திகதி) விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என ஆளும் கட்சி எம்.பி.க்கள் குழுக் கூட்டத்தில் கோரப்பட்டதாக தெரிவித்த அமைச்சர்,


அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் மதிப்பீட்டு அறிக்கைகள் கிடைத்த பின்னர், கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் அமைந்துள்ள அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். அந்த அலுவலகத்தின் கணிப்பீட்டின் பின்னர் தயாரிக்கப்பட்ட இறுதி அறிக்கையை அமைச்சரவையில் சமர்ப்பித்த பின்னரே எம்.பி.க்கள் முழு இழப்பீட்டை பெற முடியும் என்றார்.

No comments

Powered by Blogger.