Header Ads



பாராளுமன்றத்தின் மாதாந்த மின் கட்டணம் 60 இலட்சம் ரூபா


பாராளுமன்றத்தின் மாதாந்த மின் கட்டணம் 60 இலட்சம் ரூபாவை அண்மித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும, இன்று (20) தெரிவித்தார்.


பாராளுமன்றத்தின் மாதாந்த மின்சாரக் கட்டணம் 60 இலட்சம் ரூபாய் எனவும், அதனைக் குறைக்கும் வகையில் சூரிய மின்கலங்கள் மூலம் மின்சாரம் பெறும் முறை தயாரிக்கப்பட வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.


அதற்குப் பதிலளித்த மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, பாராளுமன்றத்தில் 60 இலட்சம் ரூபாய் மின்சாரக் கட்டணத்தை செலுத்துவதற்குப் பதிலாக சூரிய ஒளி மின்சார அமைப்பை ஏற்படுத்துவது அவசியமானது.


எவ்வாறாயினும், அதற்கான பணத்தை தமது அமைச்சு வழங்க முடியாது எனவும், தேவைப்பட்டால் தொழில்நுட்ப ஆதரவை வழங்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

1 comment:

  1. அதற்கு இலகுவான தீர்வு, இன்னும் ஒரு பத்துவீதம் மின்சாரவரி 69 இலட்சம் மக்களிடமும் குறிப்பாக அந்த பொஹொட்டுவ 134 பேரிடமும் பத்து வீத வரியை அறவிட்டால் பாராளுமன்றத்தின் 60 இலட்சம் ரூபா மின்சார கட்டணத்தை இலகுவில் செலுத்திவிடலாம்.

    ReplyDelete

Powered by Blogger.