Header Ads



உணவுப் பொருட்களின் விலையேற்றம் அதிகமுள்ள முதல் 5 நாடுகளில் இலங்கை


2022 ஆம் ஆண்டில் உணவுப் பொருட்களின் விலையேற்றம் அதிகமாக இருக்கும் முதல் 10 நாடுகளில் முதல் ஐந்து இடங்களுக்குள் இலங்கையும் இடம்பெற்றுள்ளது.


53 நாடுகளில், உணவுப் பாதுகாப்பு தொடர்பான உலக வங்கியின் அண்மைய அறிக்கையில் இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.


அதிக பெயரளவிலான உணவுப் பணவீக்கம் உள்ள நாடுகளில், ஆண்டு அடிப்படையில் 91% உடன் இலங்கை நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.


2021 செப்டம்பரில் 9.9% ஆக இருந்த இலங்கையின் உணவுப் பணவீக்கம், 2022 ஏப்ரல் (45.1%) முதல் ஜூலை 2022 (90.9%) வரையிலான நான்கு மாத காலப்பகுதிக்குள் வானளாவ உயர்ந்துள்ளது.


ஆண்டு அடிப்படையில் உணவுப் பணவீக்க பட்டியலில் 353% உடன் சிம்பாப்வே முதலிடத்திலும், லெபனான் (240%) மற்றும் வெனிசுலா (131%) உடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.


இலங்கைக்கு அடுத்தபடியாக முறையே துர்கி, ஈரான், அர்ஜென்டினா, மோல்டோவா, எத்தியோப்பியா மற்றும் ருவாண்டா ஆகிய நாடுகள் உள்ளன..


இந்த சூழ்நிலையால் உலகளவில் 205.1 மில்லியன் மக்கள் உணவு நெருக்கடி அல்லது கடுமையான உணவு நெருக்கடியை எதிர்கொள்வார்கள் என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.


இந்த ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் வரை சோமாலிய வளைகுடா பகுதிக்கு பஞ்சம் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் அறிக்கை எச்சரித்துள்ளது.

No comments

Powered by Blogger.