Header Ads



நமது கடனை அடைப்பதற்கு 25 ஆண்டுகள் செல்லும், சுதந்திரம் பெற்ற 100 ஆவது ஆண்டில் சுபீட்சமான நாடாக முடியும் - ரணில்


வங்குரோத்து நிலையை அடைந்துள்ள இலங்கை அதிலிருந்து மீள பல தசாப்தங்கள் ஆகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.


இரண்டாவது எலிசபேத் மகாராணியின் இறுதி நிகழ்வில் பங்கேற்கும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க லண்டன் சென்றுள்ளார்.


இதன்போது புலம்பெயர் இலங்கையர்களுடன் இடம்பெற்று கலந்துரையாடலில் ஜனாதிபதி கலந்து கொண்டார். இதன்போது முக்கிய பல தகவல்களை வெளியிட்டார்.


இதன்போது நாம் பெற்றுள்ள கடன்களையும் அடைக்க வேண்டும். கடனை அடைப்பதற்கு இன்றிலிருந்து 25 ஆண்டுகள் வரை செல்லும்.


அதாவது 2048 இல், இலங்கை சுதந்திரம் பெற்று 100 ஆண்டுகள் நிறைவடையும் சந்தர்ப்பத்தில் இலங்கை சுபீட்சமான நாடாக உருவாக முடியும். அச்சமயத்தில் நம்மில் பலர் உயிருடன் இருக்கமாட்டோம். ஆனால் அதற்கு பங்களித்தவர்களாக இருப்போம் என தெரிவித்தார்.


சர்வதேச நாணய நிதியத்துடனான பணியாளர் மட்ட ஒப்பந்தத்தில் ஏற்கனவே கையெழுத்திட்டுள்ளோம். நாம் இந்தியா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளுடனும் தனியார் கடன் வழங்குநர்களுடனும் பேச்சு நடத்த வேண்டும்.


புலம்பெயர் இலங்கையர்கள் வடக்கு, தெற்கு பகுதிகளில் தமது முதலீடுகளை மேற்கொள்ள முடியும். இதன்மூலம் நாடு வளர்ச்சி நிலையை அடையும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.


பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள மக்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் நாடு ஆரோக்கியமான நிலையை அடைய இரண்டு தசாப்தங்கள் செல்லும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளமை மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

No comments

Powered by Blogger.