Header Ads



பாராளுமன்றில் 20 கட்சிகள் இருந்தாலும் 42 ஆக பிளவடைந்துள்ளன


நாடாளுமன்றம் 42 பிரிவுகளாக பிளவடைந்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.


ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சர்வகட்சி அரசாங்கமொன்றை நிறுவுவதற்கு முயற்சித்து வரும் நிலையில் நாடாளுமன்றில் பல பிளவுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.


ஜனநாயகம் பற்றி பேசினாலும் அதனை உருவாக்குவது மிகவும் கடினமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.


ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக நியமிக்கப்பட முன்னர் மக்கள் எரிபொருள், எரிவாயு வரிசைகளில் காத்திருந்தனர் எனவும், தற்பொழுது கூடுதல் விலைக்கேனும் அவற்றை பெற்றுக்கொள்ள முடிகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


மேலும், டி.எஸ்.சேனநாயக்க பெரும்பான்மை பலமின்றி பிரதமராக தெரிவு செய்யப்பட்டார் எனவும், தற்பொழுது பெரும்பான்மை பலத்துடன் ரணில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் வஜிர அபேகுணவர்தன தெற்கு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. அதைத்தான் ஆர்ப்பாட்டக்காரர்கள் சுருக்கமாகக் கூறினார்கள். இருநூற்றி இருபத்திஐந்து பேரும் கள்வர்கள், நாட்டை ஆளத் தகுதியற்றவர்கள். எனவே அனைவரும் தொலையுமாறு கேட்டார்கள். இதை பாராளுமன்றத்தில் அமர்ந்து கொண்டு ஒவ்வொரு வினாடியும் பொதுமக்களின் இலட்சக்கணக்கான ரூபாய்களை மண்ணாக்கிக் கொ்ணடு கள்வர்களைப் பற்றி மற்றொரு கள்ளன் பற்றி பொதுமக்களுக்கு அறிவுரை கூறி மக்களின் பணத்தை வீணாக்காது தொலைந்து போய்விட்டு தேர்தலை வைத்து சரியான பாராளுமன்ற அங்கத்தவர்களை தெரிவு செய்ய பொது மக்களுக்கு வாய்ப்பை வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

    ReplyDelete

Powered by Blogger.