Header Ads



IMF உதவியை பெற்றுக்கொண்ட பல நாடுகள் அழிவடைந்துள்ளன, இலங்கையின் சகல பிரச்சினைகளுக்கும் IMF தீர்வாகாது


இலங்கையின் அனைத்து பிரச்சினைகளுக்கும் சர்வதேச நாணய நிதியம் தீர்வாகாது என மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

சத்தியக்கடதாசி ஒன்றின் மூலம் அவர் இந்த விடயத்தை உச்சநீதிமன்றிற்கு அறிவித்துள்ளார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டின் அனைத்து பிரச்சினைகளுக்கும் சர்வதேச நாணய நிதியம் தீர்வு வழங்கும் என கருதுவது ஓர் மாயை. சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக்கொண்ட பல நாடுகள் அழிவடைந்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் உதவி பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் வரியை அதிகரித்தல், மக்களுக்கு வழங்கப்படும் நலன்புரிகள் அனைத்தையும் ரத்து செய்தல் அல்லது மட்டுப்படுத்தல் உள்ளிட்ட மக்களுக்கு பாதகம் ஏற்படுத்தக் கூடிய பல தீர்மானங்களை எடுக்க நேரிடும்.

 இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர் என்ற பதவியை வகித்த போது சட்ட ரீதியாக சரியான தீர்மானங்களை மட்டுமே தாம் எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும்,நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலைக்கு சில பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் எடுத்த பிழையான தீர்மானங்களே காரணம் எனவும் இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் கோரி நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பில் பதிலளிக்கும் வகையில் அஜித் நிவாட் கப்ரல் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.