ரணிலின் விஷேட பிரதிநிதியாக, நஸீர் சவூதி அரேபியா பயணம்
நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக சுற்றாடல் துறை அமைச்சர் நஸீர் அஹமட் சவூதி அரேபியாவுக்குச் சென்றுள்ளார்.
ஜனாதிபதியின் விஷேட பிரதிநிதியாகச் சென்ற அமைச்சர், (28) சவூதியின் தலைநகர் ரியாதுக்குச் சென்றார். மன்னர் காலித் சர்வதேச விமான நிலையத்தில், அமைச்சருக்கு விஷேட வரவேற்பளிக்கப்பட்டது.
சவூதி அரேபிய வௌிநாட்டமைச்சின் பணிப்பாளர் நாயகம் மஜீட் எஸ்பின் ஷொவ்லி மற்றும் சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் அம்ஸா ஆகியோர் அவரை வரவேற்றனர்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் விஷேட பிரதிநிதியாகச் சென்றுள்ள அமைச்சர், சவூதியின் முக்கிய உயர்மட்ட பிரமுகர்களைச் சந்தித்து பேச்சு நடாத்தவுள்ளார்.
Post a Comment