Header Ads



கோட்டாபயவுக்கு எந்த சலுகையும், விருந்தோம்பலும் அளிக்கவில்லை - சிங்கப்பூர்


முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு சிங்கப்பூர் அரசாங்கம், எந்த சலுகையும், விருந்தோம்பலும் அளிக்கவில்லை என்று சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷவின் சிங்கப்பூர் வருகை குறித்து பாராளுமன்ற உறுப்பினர் ஜெரால்ட் கியாமின் கேள்விக்கு பாலகிருஷ்ணன் நேற்று எழுத்துப்பூர்வமாக இந்த பதிலை வழங்கியுள்ளார்.

பொதுவாக, சிங்கப்பூர் அரசாங்கம் முன்னாள் அரச தலைவர்கள் அல்லது தலைவர்களுக்கு சலுகைகள், மற்றும் விருந்தோம்பல் ஆகியவற்றை வழங்குவதில்லை.

இதன் அடிப்படையில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் எந்தவித சலுகைகளோ, விருந்தோம்பலோ வழங்கப்படவில்லை என்று பாலகிருஸ்ணன் குறிப்பிட்டுள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷ, தனிப்பட்ட பயணமாக ஜூலை 14 அன்று சிங்கப்பூர் வந்தடைந்தார் என்று சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் முன்னர் கூறியது. தனது குறுகிய கால வருகை வீசாவை நீடித்த நிலையில் அவர் ஓகஸ்ட் 11 வரை அவர் சிங்கப்பூரில் தங்க அனுமதிக்கப்பட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.