Header Ads



மூத்த சன்மார்க்க ஆலிம், ஹாசீம் மெளலவி காலமானார்


(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

தும்புளுவாவ ஜமாஅத்தைச் சேர்ந்தவரும், ஹெம்மாதகம ஜம்இய்யதுல் உலமா சபையின் முன்னாள் உப தலைவரும், ஓய்வு பெற்ற அதிபருமான அல்-ஹாஜ் ஹாசீம் மௌலவி (வயது 88)  காலமானார்.

தும்புளுவாவைக் கிராமத்தில் 1934 ஆம் ஆண்டு பிறந்த ஹாசீம் ஆலிம், அக்காலத்தில் பிரபல்யம் பெற்றிருந்த காலி பஹ்ஜத்துல் இப்ராஹிமிய்யா அரபுக் கல்லூரியில் 1958 ஆம் ஆண்டு சன்மார்க்கக் கல்வியைக் கற்று மெளலவிப் பட்டம் பெற்றார்.

அன்னாரது மறைவு குறித்து ஹெம்மாதகம ஃபோரம் விடுத்துள்ள அனுதாப செய்தியில்....

ஹெம்மாதகமைப்  பிரதேசத்தில் குறிப்பாகவும் இலங்கைத் தீவின் பல்வேறு பகுதிகளிலும் பொதுவாகவும் சன்மார்க்கப் பணியில் ஈடுபடக் கூடிய உலமாக்களை உருவாக்குவதற்காக 1970 களின் ஆரம்பத்தில் ஓலனையில் உருவாக்கப்பட்ட 'ஸஹ்ரிய்யா அரபுக் கல்லூரி'யினதும், அதன்  ஸ்தாபக நிர்வானம் ‘ஹெம்மாதகம ஜம்மிய்யதுல் உலமா’ அமைப்பினதும் ஸ்தாபக உறுப்பினராகவும் அதன் ஸ்தாபகச்  செயலாளராகவும் பல ஆண்டுகள் பணிபுரிந்து சமய சன்மார்க்க வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றிய அல்ஹாஜ் எம். எச். எம். ஹாசீம் மெளலவியின் மறைவையிட்டு ஹெம்மாதகம போரம் தமது மிகுந்த கவலையைத் தெரிவித்துக் கொள்கிறது.

பயிற்றுவிக்கப்பட்ட ஆசிரியராகவும் பாடசாலை அதிபராகவும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடமையாற்றிய ஹாசீம் ஆலிம், இறுதியாக கொழும்பு சாஹிராக் கல்லூரியில் பணியாற்றி, 2002 இல் ஓய்வு பெற்றார். பல வருட காலங்கள் கிராமத்திற்கு வெளியே பணியாற்றினாலும், தும்புளுவாவைப் பள்ளிவாசல் உருவாக்கப்பட்ட ஆரம்பகாலத்தில் (1970) அதன் பொறுப்பாளராகவும் சேவையாற்றினார்.

ஹாசீம் ஆலிமின் மறைவு எமது சமூகத்திற்கு ஒரு பேரிழப்பாகும். சன்மார்க்க அறிஞர்களதும் சமூகத் தலைவர்களதும், கல்விமான்களதும் இறப்புகள் பொதுவாக சமூகங்களில் வெற்றிடங்களை ஏற்படுத்துகின்றன. அத்தகைய மகத்தான மனிதர்களை அல்லாஹ் தஆலா எமது சமுகத்திற்கு மீண்டும் அருள வேண்டுமென்று நாம் பிரார்த்திக்கக் கடமைப்படுகின்றோம்.

ஹாஷிம் ஆலிமின்  மறைவினால் கவலையுயுற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவரின் சமூக, சமய பணிகளை அல்லாஹ் தஆலா அங்கீகரித்துக் கொள்ள வேண்டுமென்றும், அவரது குற்றம் குறைகளை மன்னித்து மேலான சுவர்க்கத்தை அவருக்கு அருள வேண்டுமென்று எல்லாம் வல்ல அல்லாஹ்வை நாம் பிரார்த்திக்கின்றோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.