Header Ads



வாக்குறுதியை காப்பாற்றிய கோத்தபய, சர்வதேச ஒத்துழைப்புகளை தவறவிடும் ரணில்


புதியச் சட்டம் கொண்டுவரப்படும் வரையில் தற்போதுள்ள பயங்கரவாதத் தடைச்சட்டத்தை பயன்படுத்தப்போவதில்லை என சர்வதேசத்துக்கு இலங்கை வாக்குறுதி வழங்கியுள்ளது. 


இவ்வாறான நிலையில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பயன்படுத்துவதால் சர்வதேசத்தின் ஒத்துழைப்புகளை இலங்கைக்குப் பெற முடியாதென ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.


நான் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சராக இருந்தபோது மேற்குறித்த வாக்குறுதியை சர்வதேசத்துக்கு வழங்கியிருந்தேன். இதனை ஏற்றுக்கொண்டு அப்போதிருந்த ஜனாதிபதி பாதுகாப்புத் தரப்பினருக்கு ஆலோசனைகளை வழங்கியருந்ததாகவும் தெரிவித்தார்.

1 comment:

  1. சட்டத்தையும் நாட்டின் நிலைமைகளையும் தனது சொந்த நலன்களுக்கும் தேவைகளுக்கும் பாவிக்கும் இதுபோன்ற சட்டம் படித்த இனம் இந்த நாட்டுக்கு மட்டுமன்றி உலகில் எந்த நாட்டிலும் வாழுவதற்குத் தகுதியற்ற பிணங்கள் என்பதை இந்த நாட்டு மக்கள் புரிந்து கொண்டு வெகுகாலமாகிவிட்டது. பின்கதவினூடாக சிரிமாவோ பண்டாரநாயக்கா பிரதமரை அணுகி அரசியலில் நுழைந்து, அம்மையாருக்கு ஆப்பு வைத்து ரணிலுடன் சேர்ந்து, ரணிலை உதைத்துத் தள்ளிவிட்டு, ராஜபக்ஸாக்களுக்கு வால்பிடித்து, தோல்வியடையும், நிச்சியம் ரணிலிடம் நெருங்கவும் முடியாது என்பது உறுதியான பின் ரணிலுக்கு ஆப்புவைக்கும் பணியைத் தொடரும் இது போன்ற இந்த நாட்டு மக்கள் பூரணமாக நிராரித்த பின்பும் கொக்கரிக்கும் இந்த பிராணிக்கு என்னவென்று கூறுவது!

    ReplyDelete

Powered by Blogger.