Header Ads



ரணிலின் ஓரங்கட்டும் நடவடிக்கை ஆரம்பம்


தனக்கு எதிராக செயற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை ஓரங்கட்டும் நடவடிக்கையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற ஜனாதிபதி தெரிவுக்கான வாக்குபதிவின் போது தனக்கு எதிராக வாக்களித்தவர்களை பதவிகளிலிருந்து அகற்ற ரணில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் தனக்கு எதிரானவர்களை ரணில் இனங்கண்டுள்ளார். அவர்களை கட்சியில் இருந்து பின்னடைவு அடைய செய்யும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் நேற்று பொதுஜன பெரமுன கட்சி குழுவினர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இது தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது.

மாவட்ட மட்டத்திலான ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதன்படி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஊடாக முன்னெடுக்கப்படும் ஆட்சித் திட்டத்திற்கு உடன்படாத அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் குழுத் தலைவர் பதவிகளில் இருந்து நீக்கப்படவுள்ளதாக தெரியவருகின்றது.

இதன் முதற்கட்டமாக கண்டி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக இருக்கும் வசந்த யாப்பா பண்டாரவை நீக்கி கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குணதிலக ராஜபக்ஷவுக்கு அப்பதவி வழங்க தீர்மானிக்கப்பட்டள்ளது.

பொதுத் தேர்தலில் படுதோல்வி அடைந்த ரணில் விக்ரமசிங்க அதிஷ்டவசமாக ஜனாதிபதியாக தெரிவாகி உள்ளார். அந்தப் பதவியை தக்க வைத்துக் கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மறைமுகமாக ரணில் மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.