Header Ads



கொடூரமான பயங்கரவாத சட்டத்தை பயன்படுத்தி, அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்களை கைது செய்வதை கண்டிக்கிறோம்


பயங்கரவாத தடைச்சட்டத்தின் ஏற்பாடுகளை பயன்படுத்தி அரசாங்கத்திற்கு எதிராக எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கடும் விசனம் தெரிவித்துள்ளது. 


இந்த கொடூரமான சட்டத்தின் ஊடாக கைது செய்யும் நபர்களை நீண்ட  காலம் தடுத்து  வைப்பதற்கான அதிகாரம், நிறைவேற்றதிகாரத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணிகள் சங்கத்தின் நிறைவேற்று சபை விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


தடுத்து  வைக்கும் உத்தரவுகள், அடிப்படை சட்டங்கள் மற்றும் நீதிமன்ற அதிகாரங்களுக்கு உட்பட்டதாக அமைந்தாலும், பொதுவான சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைப்பதை போன்றல்லாது இந்த கைதுகள் முறையான நீதிமன்ற கண்காணிப்பிற்கு உட்படாது என  சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. 


நீதிமன்ற கண்காணிப்பு இன்றி ஒருவரை நீண்ட காலம் தடுத்து வைத்திருப்பது சர்வதேசத்தில் அங்கீகரிக்கப்பட்ட மனித உரிமை பாதுகாப்பு தரங்களுக்கு முரணானது எனவும் சட்டத்தரணிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது. 


அத்தோடு, இவ்வாறு தடுத்து வைக்கப்படுவதன் மூலம் கைதி துன்புறுத்தப்படுவதற்கும் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதற்கும் வாய்ப்புள்ளதாக சட்டத்தரணிகள் சங்கத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


நியாயப்படுத்தக்கூடிய பயங்கரவாத போக்கு காணப்படும், ஆதாரங்களுடன் கூடிய சந்தர்ப்பங்களில் மாத்திரமே பயங்கரவாத தடைச்சட்டத்தின் ஏற்பாடுகளை பயன்படுத்த வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


இதனால் பயங்கரவாத தடைச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதை தவிர்த்துக்கொள்ளுமாறு சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. 

2 comments:

  1. முதலாவதாக, BASL அதன் வழக்கறிஞர்கள்/உறுப்பினர்கள் "அதிகமான" சட்டக் கட்டணங்களைத் தங்கள் வாடிக்கையாளர்கள் அல்லது நீதிமன்ற அறைகள்/நீதிமன்றத்தில் தங்கள் சட்டப் பிரதிநிதித்துவத்தைப் பெற வேண்டிய நபர்களிடம் இருந்து "அதிகமான" சட்டக் கட்டணங்களை வசூலிக்க/சேகரிப்பதை/வசூலிப்பதை நிறுத்த வேண்டும். சட்டத்தின் ஆட்சி.
    வழக்கறிஞர்கள், பாரிஸ்டர்கள், மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் ஜனாதிபதி ஆலோசகர்கள் ( வழக்கறிஞர்கள்
    சட்ட பிரதிநிதிகள்) தொடங்கி, சட்டத்தின்படி வழங்கப்படும் இந்த சேவைகளுக்கு, இதுபோன்ற சேவைகள் தேவைப்படும் அனைத்து தரப்பு மக்களிடமிருந்தும் முன்னெப்போதும் இல்லாத அல்லது அதிகப்படியான கட்டணத்தை வசூலிக்கின்றனர். இந்த அதிகப்படியான சட்டக் கட்டணங்களை உடனடியாக நிறுத்த BASL நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் முதலில் இதை செய்துவிட்டு, பயங்கரவாத தடை சட்டத்தின் கைதுகள் பற்றி பேச வேண்டும்.
    Noor Nizam - நூர் நிசாம் - சமாதானம் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர், அரசியல் தொடர்பாடல் ஆய்வாளர், SLFP/SLPP ஸ்டால்வர்ட், "முஸ்லிம் குரல்" அழைப்பாளர், தேசப்பற்றுள்ள குடிமகன்.

    ReplyDelete
  2. First and foremost, BASL should "URGE" its lawyers/members and the Legal fraternity "NOT" to charge "EXOBIRTANT" legal fees from their clients or people who have to seek their legal representation in court rooms/court house as and when required under the rule-of-law.
    Starting from Proctors, Attorney-at-Law, Advocates, Barristers, Senior Counsels and President's Counsels are charging unprecedented and or exorbitant fees for these services rendered as required by law, from the people of all walks of life who need such services. BASL has to take action to immediate stop these exorbitant legal charges. They should first do this and then talk about the PTA arrests.
    Noor Nizam - Peace and Political Activist, Political Communications Researcher, SLFP/SLPP Stalwart, Convener "The Muslim Voice", Patriotic Citizen.

    ReplyDelete

Powered by Blogger.