Header Ads

நாட்டில் 79 பதிவு செய்யப்பட்ட கட்சிகள் இருக்க, புதிதாக 79 கட்சிகள் பதிவு செய்ய விண்ணப்பம்


79 அரசியல் கட்சிகள் புதிதாகப் பதிவு செய்வதற்கு விண்ணப்பங்களை தேர்தல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளன என ஆணைக்குழுவின் மூத்த பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். 


இந்த 79 விண்ணப்பங்களில் 35 விண்ணப்பங்கள் முறையாகப் பூர்த்தி செய்யப்படாததால் நிராகரிக்கப்பட்டுள்ளன. 


மீதமுள்ள 44 கட்சிகளின் விண்ணப்பங்கள் மீள்பரிசீலனை செய்யப்பட்டு, இறுதி முடிவு விரைவில் அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்தார். நாட்டில் 79 பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் ஏற்கனவே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.