Header Ads



2 வருடங்களுக்கு எந்தத் தேர்தலையும் நடத்த முடியாது, பெரும்பான்மையை நிரூபிக்க அவசியம் இல்லை - ரணில்


இரண்டு வருடங்களுக்கு எந்தத் தேர்தலையும் நடத்த முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க திட்டவட்டமாக அறிவித்துள்ளார். 


தேர்தலை நடத்துமாறு கோரி மக்கள் விடுதலை முன்னணியால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்றிடம் கருத்துரைக்கையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். 


மேலும் தெரிவிக்கையில், "எதிரணியில் உள்ள ஒரு சில கட்சிகள் கூறுவது போல் தேசிய ரீதியில் தேர்தல் ஒன்றை இப்போதைக்கு நடத்த முடியாது. இரண்டு வருடங்களுக்கு எந்தத் தேர்தலையும் நடத்த முடியாது.


உள்ளூராட்சி சபைத் தேர்தலையாவது நடத்தும்படி சில கட்சிகள் பரிந்துரைத்துள்ளன. அது தொடர்பில் பரிசீலித்து வருகின்றோம். மக்களின் வயிற்றுப் பிரச்சினைக்கு முதலில் நிரந்தரத் தீர்வு காண வேண்டும்.


அதன் பின்னரே ஏனைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலம் தற்போதைய அரசாங்கத்திடம் உண்டு. நானும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலத்துடன்தான் ஜனாதிபதியாகத் தெரிவாகினேன்.


இந்நிலையில், தேர்தலை வைத்துப் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. எந்தவொரு தேர்தலையும் மக்கள் இப்போது விரும்பவில்லை. எதிரணியிலுள்ள ஒரு சில கட்சிகள்தான் தேர்தலை விரும்புகின்றன.


முதலில் பொருளாதார நெருக்கடிக்கு ஒன்றிணைந்து தீர்வு காண முன்வருமாறு தேர்தலை விரும்பும் கட்சிகளுக்கு மீண்டும் மீண்டும் அழைப்பு விடுக்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார். 

1 comment:

  1. 2வருடங்களுக்கு முன்பு எந்தத் தேர்தலையும் நடத்த முடியாது. நான் 134හතරාධිපති பாராளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் தான் வந்திருக்கின்றேன். அதனால் தான் ஒரு லீடருக்கு 87 ரூபாவாக இருந்த மண் ணென்ணெய் யை 340 ரூபாவாக எனக்கு விரும்பியவாறு 240 ரூபாக்களை அதிகரித்தேன். எனவே மண்ணென்ணெய் பாவிக்கும் மக்கள் எனக்கு பூரணமாக அவர்களின் ஆதரவையும் வாக்குகளையும் தருவார்கள். எனவே நான் உயிருடன் இருக்கும்வரை எந்தத் தேர்தல்களும் நடைபெறாது.நான் செத்து மடிந்தபின் என்னை மண்ணென்ணெய் ஊற்றி எரித்தபின்னர் உடனடியாக அதை 240 ரூபாக்கள் குறைந்து ஒரு கிலோ 87வாக மாற்றி உங்களுக்கு விருப்பமான ஒருவரை சனாதிபதியாகத் தெரிவு செய்து கொள்ளுங்கள். ஏனெனில் எனது ஆட்சிகாலத்தில் நாட்டின் முன்னேறத்துக்கு முன்பு ராஜபக்ஸக்களைக் காப்பாற்றும் பாரிய கடமை எனக்கு இருக்கின்றது. அதனைச் செய்ய வெறும் இரண்டு வருடங்கள் போதாது. பொதுமக்கள் செய்யும் முறைப்பாடுகள், வழக்குகளை அவ்வப்போது இரத்துச் செய்வது, ராஜபக்ஸ குடும்பம் களவாடிய ட்ரிலியன் கணக்கான டொலர்களைப் பாதுகாப்பது, உலகின் பல நாடுகளில் அவர்களுடைய கள்ள முதலீடுகளைப் பாதுகாத்து இலாபம் உழைத்துக் கொடுப்பது என்பது பொதுமக்கள் நினைப்பது போன்று சாதாரண விடயமல்ல. அதற்கு மாத்திரம் ஐந்து வருடங்களுக்கு மேற்பட்ட காலம் தேவை. தொடர்ந்து நாமலுக்கு சனாதிபதி கதிரையை சமைப்பது அடுத்த காரியம். அவை எல்லாவற்றையும் செய்வதற்கு எனக்கு இந்தக் காலம் போதாது. எனவே சும்மா, சும்மா, தேர்தல் என்ற வம்பளந்து கொண்டிருக்க வேண்டாம்.

    ReplyDelete

Powered by Blogger.