Header Ads



16 மணிநேரமாக வீட்டின் கட்டிலில், அமர்ந்திருந்து கர்ஜித்த சிறுத்தை - நுவரெலியாவில் சம்பவம்


வீட்டுக்குள் சிக்கிக்கொண்ட சிறுத்தையை வனஇலாக அதிகாரிகளும், பொலிஸாரும் இணைந்து மடக்கிப் பிடித்துள்ள சம்பவம்   லிந்துலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட லோகி கூம்வூட் தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.


அந்த சிறுத்தையை பார்வையிடுவதற்கு சென்றிருந்த ஒருவர், சிறுத்தையின்  தாக்குதலுக்கு உள்ளான நிலையில், நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


நாயொன்றை வேட்டையாடுவதற்கு துரத்திக்கொண்டு வந்த சிறுத்தை, லயன் கூரையை உடைத்துக்கொண்டு அவ்வீட்டின் படுக்கை அறைக்குள் விழுந்துள்ளது. இந்த சம்பவம் நேற்று  04) இரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.


​லிந்துலை, லோகி தோட்டத்தில் இடம்பெற்ற சம்பவத்தை அடுத்து, அவ்வீட்டைச் சேர்ந்தவர்கள் பதற்றமடைந்து வீட்டிலிருந்து வெளியேறி கதவை, வீட்டுக்கு வெளியே அடைத்துக்கொண்டனர்.


சம்பவம் தொடர்பில் அவ்வீட்டின் உரிமையாளர் எஸ்.சுரேஷ் கருத்துதெரிவிக்கையில் அன்றிரவு 11.40 மணியிருக்கும், நான் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தேன். திடீரென மின்சாரம் தடைப்பட்டது. கடும் மழையும் பெய்துக்கொண்டிருந்தது. பாரிய சத்தமொன்று கேட்டது. ஏதோ விபரீதம் என நினைத்துக்கொண்டு நானும், மனைவியும் பிள்ளைகளுடன் வீட்டை விட்டு வெளியேறிவிட்டோம்.


கர்ஜிக்கும் சத்தம் கேட்டது. அதனையடுத்து யன்னல்களின் ஊடாக பார்த்தபோது பெரிய சிறுத்தையொன்று அங்குமிங்கு நடமாடிக்கொண்டிருந்தது. அத​ன்பின்னரே, பொலிஸாருக்கு நாங்கள் தகவல் கொடுத்தோம் என்றார்.


சுமார் 16 மணிநேரமாக வீட்டின் கட்டிலில் அமர்ந்திந்தது மட்டுமன்றி வெளியில் பாய்வதற்கும் முயன்ற சிறுத்தையை மயக்கஊசி செலுத்தி பிடித்த வனஇலாகா அதிகாரிகள், அதனை காட்டுக்குள் விடுவதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தனர்.  (தமிழ்மிரர் நிருபர்கள்)

No comments

Powered by Blogger.