Header Ads



இலங்கையின் ஒவ்வொரு குடிமகனும் 1 மில்லியன் ரூபா கடனாளி


இலங்கையில் தனிநபர் கடன் தொகை தற்போது 1 மில்லியன் ரூபாவை கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி, ஏப்ரல் 2022க்குள், மத்திய அரசு செலுத்த வேண்டிய மொத்த கடன் தொகை 4 மாதங்களுக்குள் 32 சதவீதம் அதிகரித்துள்ளது.


இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின்படி, 2022 ஏப்ரல் மாதத்திற்குள் மத்திய அரசாங்கம் செலுத்த வேண்டிய மொத்த கடன் தொகை 23,310.1 பில்லியன் ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.


12,442.3 பில்லியன் ரூபா உள்நாட்டுக் கடன்களாகவும் 10.867.8 பில்லியன் ரூபா வெளிநாட்டுக் கடன்களாகவும் இருப்பதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.


2021 ஆம் ஆண்டின் இறுதியில் 17,589.4 பில்லியன் ரூபாவாக பதிவாகியிருந்த மத்திய அரசாங்கத்தின் மொத்தக் கடன் 04 மாத காலப்பகுதிக்குள் 5,720.7 பில்லியன் ரூபா அல்லது 32.52% அதிகரித்துள்ளது என்பது விசேட அம்சமாகும்.


அதேவேளை, இலங்கையில் தனிநபர் கடனின் அளவும் விரைவான அதிகரிப்பை சந்தித்துள்ளது.


இந்நாட்டின் சனத்தொகை 22 மில்லியன், அதன்படி இலங்கையின் ஒவ்வொரு குடிமகனும் 10 இலட்சம் ரூபா கடனாளிகளாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. இது அவ்வளவு பிரச்சினையில்லை. தலா ஒரு இலங்கைப் பிரஜைக்கு இரண்டு மில்லியன் ரூபாக்கள் கடனிருந்தாலும் பரவாயில்லை. அந்த சூழலை ஏற்படுத்தி இந்த கள்ளக்கூட்டத்துக்கு தாராளமாகக் களவாடும் சூழலை உருவாக்கும் திட்டம் திரைமறைவில் நடைபெறுவதாக கூறப்படுகின்றது.இந்த நாடு உருப்படியாக வேண்டுமென்றால் ஒவ்வொரு பிரஜையும் முதலாம் மண்டல நாடுகள் எவ்வாறு விருத்தியடைந்து முன்னேற்றத்தை அடைந்துள்ளன என்பதை ஆழமாகவும், ஆய்வு ரீதியாகவும் வாசித்து விளங்கி அவற்றைச் செயற்படுத்தினால் மாத்திரமே இந்த நாட்டுக்கு விடிவு உண்டு. இனத்துவேசத்தையும்,களவு, கமிசனையும் மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு யார் என்ன கேடுகெட்டாலும் பரவாயில்லை எனது பொக்கட் நிறைய வேண்டும் என்ற சிந்தனையுடன் அரசியல் செய்யும் கீழ்த்தரமான அரசியல் இருக்கும் வரை இந்த நாடு உறுப்படியாக மாட்டாது.

    ReplyDelete
  2. நல்லதொரு பகிடி எந்த ஒரு குடிமகனும் யாருக்கும் கடன் இல்லை கடன் பட்டவர்கள் கடனைத் திருப்பிச் செலுத்துவர்

    ReplyDelete

Powered by Blogger.