Header Ads



உதாசீனப்படுத்தப்பட்ட ரணிலின் உத்தரவு, பேஸ்புக் Live - அரச அலுவலகங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் பிடிக்க உதவியதா..?


ஜனாதிபதி மாளிகை மற்றும் பிரதமர் அலுவலகத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் கையகப்படுத்துவது இலகுவாக இருந்தமைக்கு சமூக வலைத்தளங்ககே காரணம் என பாதுகாப்பு பிரதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சமூக வலைத்தளங்களை குறுகிய காலத்திற்கு முடக்குமாறு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவிற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க வழங்கிய உத்தரவை உதாசீனப்படுத்தியமையினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

பேஸ்புக் லைவ் போன்ற சமூக ஊடகங்கள் ஊடாக மக்களை போராட்டத்திற்கு அழைப்பதை நிறுத்துமாறு பாதுகாப்புத் தலைவர்கள் விடுத்த வேண்டுகோளை அடுத்து இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அறிவுறுத்தல்களை புறக்கணித்துள்ளதாக தெரியவந்துள்ளது. பதில் ஜனாதிபதியாக செயல்படும் பிரதமர், கடந்த 13 ஆம் திகதியன்று, தொலைத்தொடர்பு ஆணைக்குழுவின் தலைவரை இராணுவத் தலைமையகத்திற்கு அழைப்பதற்காக வாகனம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

பாதுகாப்புப் படையினரின் வேண்டுகோளின் பேரில் சம்பந்தப்பட்ட தொலைபேசி நிறுவனங்களுடன் கலந்தாலோசித்து சமூக வலைதளங்களை உடனடியாக முடக்குமாறு உத்தரவிடப்பட்டது.

எனினும் அந்த அறிவுறுத்தல் புறக்கணித்ததால் பிரதமர் அலுவலகத்தை கையகப்படுத்துவதற்கு ஆர்ப்பாட்ட செயற்பாட்டாளர்கள் ஒரு பெரிய குழு அங்கு கொண்டு வரப்பட்டதாக பாதுகாப்புத் தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அண்மையில் இந்தியாவில் ரயில்களை எரித்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது அந்த நாட்டின் அதிகாரிகள் இணைய வேகத்தை 4Gயில் இருந்து 3Gக்கு மாற்றியதன் மூலம் கட்டுப்படுத்தினர்கள். சம்பந்தப்பட்ட பகுதிகளில் இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு நடவடிக்கையை கட்டுப்படுத்த முயற்சித்தோம்.

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் உத்தரவை உதாசீனப்படுத்தியமையினால் முடியாமல் போனதென பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். 

No comments

Powered by Blogger.