Header Ads



இலங்கையின் தற்போதைய நிலை குறித்து மிக உன்னிப்பாக அவதானிக்கிறோம் - IMF


இலங்கையின் தற்போதைய நிலை குறித்து மிகவும் உன்னிப்பாக அவதானித்து வருவதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் கூடிய வேலைத்திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தையை மீள ஆரம்பிக்க அனுமதிக்கும் தற்போதைய நிலைமைக்கு தீர்வு காண முடியும் என நம்புவதாகவும் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியின் தாக்கம் காரணமாக பாதிக்கப்படகூடிய மக்கள், குறிப்பாக ஏழை மற்றும் பாதிக்கப்படக்கூடிய குழுக்கள் மீது ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளோம்.

சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளுக்கு இணங்க, இந்த கடினமான நேரத்தில் இலங்கைக்கு ஆதரவளிப்பதற்கான எங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம்.

இந்நிலையில், நிதியமைச்சகம் மற்றும் இலங்கை மத்திய வங்கியில் உள்ள தமது பிரதிநிதிகளுடன் தொழில்நுட்ப கலந்துரையாடல்களை தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளதாக சர்வதேச நாயண நிதியம் மேலும் தெரிவித்துள்ளது.  


No comments

Powered by Blogger.