Header Ads



முஸ்லிம் நாடுகள் எம்மோடு உள்ளன - ரணிலுக்கு சஜித் பதிலடி (வீடியோ)


எதிர்க்கட்சித் தலைவர் இன்று(05) பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை.

உங்களுடைய அரசில்  அமைச்சரவையின் சார்பாக கட்டார் நாட்டு அபிவிருத்தி நிதிய காரியாலயத்தை திறந்து வைப்பதற்காக நானே சென்றிருந்தேன். அப்போது அக் கட்டார் நிறுவனம் தீவிரவாத நிறுவனம் என நீங்கள் கூறினீர்கள்.இது நீங்கள் பிரதமராக இருக்கும் வேளையில் நான் சென்று திறந்து வைத்தது.என்னுடன் பௌசி மற்றும் ரிசார்ட் பத்ருதீன் வந்திருந்தார்.ஆனால் இன்று கேட்கிறார்கள் ஏன்  எரிபொருளை அவர்கள் தருவதில்லை என்று.வெட்கமாக இருக்கிறது.  நீங்கள் தீவிரவாதத்தை மற்றும் மத தீவிரவாதத்தை உருவாக்கி மதங்களுக்கிடையிலான பிரச்சினையை உண்டு பண்ணி  மத்திய கிழக்கு நாடுகளை பகைத்துக்கொண்டீர்கள்.நான் கேட்க விரும்புகிறேன்,மத்திய கிழக்கு நாடுகளில்  மதிப்பு பெற்ற இருவர் இருக்கிறார்கள்.  ஒருவர்தான் ரணசிங்க பிரேமதாஸ அவர்கள் அடுத்தவர் தான் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள்.  ஆனால் மத தீவிரவாதத்தை மத பிரிவினையை உண்டு பண்ணி மத்திய கிழக்கு நாடுகளை பகைமை நாடுகளாக மாற்றினர். கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் ஆட்சிக் காலத்தில் அது இன்னும் உக்கிரமடைந்தது. கௌரவ சபாநாயகர் அவர்களே,மீண்டும் கட்டார் நாட்டிற்கு சென்று பிச்சைப் பாத்திரத்தை உருட்டுவது வெட்கி தலைகுனிய வேண்டிய விடயமாகும்.அவர்கள் அங்கு சென்ற தினமே என்ன நடக்கிறது .கடார் தேசம் ஓர்  அறிக்கையை வெளியிடுகிறது. 


கௌரவ சபாநாயகர் அவர்களே,  பாடம் கற்றுக் கொள்வதற்கு அவருடன் வந்து சேருமாறு பிரதமர் அவர்கள் தெரிவிக்கிறார்கள்.  நாங்கள் சொல்ல விரும்புவது என்னவென்றால் அவருக்கு புகட்ட முடியுமான சிறந்த பாடத்தை புகட்டி தேசிய பட்டியலுக்கு அவரைக் கொண்டு வந்து நிறுத்தினோம். அவரை பூச்சியத்திற்கே இறக்கி வைத்தோம். ஆனால் இப்போது அவர் சொல்கிறார் எமக்கு பாடம் புகட்டுவதாக.  சபாநாயகர் அவர்களே, இறுதியாக பிரதமர் அவர்கள் இப்போது  எழுந்து கூறுகிறார் அழகிய கதைகள் கூற வேண்டாம் என்று.  சபாநாயகர் அவர்களே, ஓர் பேனா முனையின் மூலம் வரிசைகளை இல்லாமல் ஆக்குவதாக யார் கூறினார் என்பதை கேட்க விரும்புகிறேன். 4,5 அமெரிக்க டொலர் பில்லியன் உடன் பிரதமர் பதவியை ஏற்றதாக யார் கூறியது.  48 மணித்தியாலத்துக்குள் உணவு பற்றாக்குறை வரிசை பிரச்சினையை தீர்ப்பதாக யார் கூறியது.  நாம் கூறவில்லை பிரதமர் அவர்களே தெரிவித்தார்.இவர் முதுகெலும்பில்லாத பிரதமர் என்பதை முழு நாடும் அறிந்த விடயமே முழு உலகமும் அறிந்த விடயமே. வெளிநாடுகளில் இருந்து உதவிகளைப் பெறும் முறையை மிகக் கிட்டிய எதிர்காலத்தில் நான் உங்களுக்கு கற்றுத் தருகிறேன் என்பதை நான் அவருக்கு கூறவிரும்புகிறேன்.ஆனால் அதை செய்வது இவருக்கு பாடம் புகட்டுவதற்கு மாத்திரமல்ல நாட்டு  மக்களுக்கும் சேவையாற்ற முடியும் ஆனவர் சேவையாற்ற முடியாதவர் எங்கிருக்கிறார் என்பதை நிரூபித்து  காட்டுவதட்குமாகும். 

சபாநாயகர் அவர்களே, கட்டார் நாட்டு விடயத்தில் செய்த கீழ்த்தரமான விடயம் தொடர்பாக ஆராய்ந்து பார்க்குமாறு நான் தெளிவாக பிரதமர் அவர்களுக்கு கூற விரும்புகிறேன். அவர்களுக்கு தீவிரவாதிகள் என்று சொன்னார்கள், ஆனால் இன்று எரிபொருளை பெறுவதற்கான உதவிப் பணத்தைப் பெறுவதற்கு செல்லும்போது அந் நாட்டிற்கு  வர்ணம் பூசுகிறார்கள்  இவ்வரசு. மத்தியக் கிழக்கு நாடுகளின் நம்பிக்கை ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணி உள்ளடங்கலான எதிர்க்கட்சி பெற்றுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். எதிர்க்கட்சியில் இருக்கும் அனைத்து கட்சிகளுக்கும் நாம் அதை  ஒப்புவித்து காட்டுவோம்.சபாநாயகர் அவர்களே, இறுதியாக பிரதமர் அவர்களுக்கு தெரிவிக்க விரும்புவது என்னவென்றால், எரிவாயு வியாபாரம் தொடர்பாக எரிவாயு கொள்ளை தொடர்பாக இச்சபைக்கு  தெரிவியுங்கள், நாட்டு மக்களின் துக்கத்திற்கு மத்தியிலும் ஏன் கொள்ளை அடிக்கிறீர்கள்?ஏன் மோசடி செய்கிறார்கள்?.மிக மோசமான கள்வர்கள் கூட்டம் இது. மக்களது துயரங்களை விற்று அதன் மூலம் டொலர்களை இலஞ்சம் பெற வேண்டாம் என்று நான் தயவாக கேட்டுக்கொள்கிறேன்.  முடியும் என்றால் பதில் சொல்லுங்கள்.

No comments

Powered by Blogger.