Header Ads



அநுரகுமாரவும், சஜித்தும் இணைந்து அரசாங்கத்தை அமைப்பார்களா..?


அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச பதவி விலகும் பட்சத்தில் தற்போதைய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அரச தலைவராக வரவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியிலேயே சபாநாயகரும் இருப்பதால் மேலும் குழப்பங்கள் ஏற்படலாம் என சுட்டிக்காட்டப்படுகின்றது.

இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான அநுரகுமார திஸாநாயக்க மற்றும் சஜித் பிறேமதாச ஆகியோர் இணைந்து அரசாங்கத்தை அமைக்கும் ஒரு தெரிவு காணப்படுவதாக அரசியல் ஆய்வாளரும் ஊடகவிலாளருமான அமிர்தநாயகம் நிக்சன் கூறுகிறார்.

ஐ.பி.சி தமிழுக்கு விசேட செவ்வியில் அவர் இதனைச் சுட்டிக்காட்டினார்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை காரணமாக அரச தலைவர் - பிரதமரை பதவி விலகக் கோரி பொதுமக்கள் வீதியில் இறங்கி பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், இன்று சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறான நெருக்கடி நிலையில், அரச தலைவர் பதவி விலகினால், தற்போதைய சபாநாயகர் தற்காலிக அரச தலைவராக பதவி வகிக்கலாம் என்று கூறப்படும் நிலையில், அமிர்தநாயகம் நிக்சன் தனது எதிர்வு கூறலை வெளியிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.