Header Ads



ரணிலின் அமைச்சரவையில் கம்மன்பிலவும், வீரவங்சவும் அமரப் போகிறார்களா..?

 
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்து நியமிக்க உள்ள அமைச்சரவையில் அமைச்சு பதவிகளை பெற்றுக்கொள்ள விமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பில உள்ளிட்டோர் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமைச்சு பதவிகளை பெறுவதற்கான தகுதியை பூர்த்தி செய்து, அதனை ரணில் விக்ரமசிங்க உறுதிப்படுத்தும் வகையில் வீரவங்ச உள்ளிட்ட அணியினர் நாட்டை தவறாக வழிநடத்த பல்வேறு கருத்துக்களை வெளியிட ஆரம்பித்துள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.

போராட்டம் காரணமாகவே ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக தெரிவானார் போன்ற கருத்துக்கள் இதில் முதன்மை பெறுகின்றன.

உதய கம்மன்பில எரிசக்தி அமைச்சராக பதவி வகித்த காலத்தில் தன்னை மீறி இடம்பெற்ற ஊழல், மோசடிகள் மற்றும் மேற்கொள்ளப்படவிருந்த நிதி மோசடி திட்டங்கள் பற்றிய தகவல்களை வெளியிட்டு, ரணில் விக்ரமசிங்கவின் அமைச்சரவையில் இடம்பிடிக்க  திட்டமிட்டு வருகிறார்.

18 பேரை கொண்ட தற்காலிக அமைச்சரவை தற்போது நியமிக்கப்பட்டிருந்தாலும் அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கை கூடிய விரைவில் 30 ஆக அதிகரிக்கப்படவுள்ளது. சர்வக்கட்சி அரசாங்கத்தின் கீழ் இந்த விரிவுப்படுத்தப்பட்ட அமைச்சரவை நியமிக்கப்பட உள்ளது.

1 comment:

  1. இந்த இரு பயங்கர கொள்ளைக்காரர்களையும் ஆகஸ்ட் முதல் வாரம் ரணிலுடன் இணைந்தால் பொதுமக்கள் ஆகஸ்ட் 09 திகதி பொதுமக்களால் இலகுவாக விரட்டியடிக்கப்படுவார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.