Header Ads



நான் பொறுப்புள்ள அரசியல்வாதி, ரணிலின் வீடு அநியாயமாக எரிப்பு, நாட்டை நிர்வகிக்கும் பொறுப்பை அவருக்கு இறைவன் வழங்கியுள்ளான்


 நாட்டின் தற்போதைய நெருக்கடியை மீட்டெடுக்கக் கூடிய வல்லமை மற்றும் அனுபவம் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ரணில் விக்கிரமசிங்கவிடம் உள்ளதாக தேசிய காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ,எல்,எம், அதாஉல்லா தெரிவித்தார். 

ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக பாராளுமன்றத்தில் நடாத்தப்பட்ட வாக்களிப்பில், ரணில் விக்ரமசிங் கவை ஆதரித்தமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது பற்றித் தெரிவித்த அவர்,

ஜனாதிபதியை பாராளுமன்றம் மூலமாக தெரிவு செய்கின்ற வாக்கெடுப்பில் ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்தேன். நீண்ட அனுபவம், அரசியல் முதிர்ச்சி இன்னும் சர்வதேசத்தில் அவருக்குள்ள தொடர்புகளால் , நாட்டின் நெருக்கடியை தீர்க்கும் இயலுமை அவரிடம் உள்ளது.

இது அரசியல் செய்வதற்கான தருணமில்லை. இதனால்தான், நெருக்கடியிலிருந்து மக்களை மீட்கும் பொறுப்புள்ள அரசியல்வாதியாக நடந்து கொண்டேன்.

தெளிந்த சிந்தனையுடைய எந்த வாக்காளரும் எடுக்கக்கூடிய தீர்மானத்தையே எமது தேசிய காங்ரஸும் எடுத்தது. அது மிகச் சரியான தீர்மானமாக அமைந்தது. தற்போதைய நெருக்கடி சூழலில் நாட்டை மீட்டு காப்பாற்ற ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ரணில் விக்கிரமசிங்கவால் முடியும்.

புதிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வீட்டை அநியாயமாக எரித்தார்கள், ஆனால் நாட்டை நிர்வகிக்கின்ற பொறுப்பை அவருக்கு இறைவன் வழங்கியுள்ளான்.

இம்மகத்தான வாய்ப்பை, ஜனாதிபதி திறம்பட பயன்படுத்துவார் என்பது திண்ணம். அனுபவசாலிகளையும், திறமைசாலிகளையும் அவர், அரவணைத்து நடப்பார்.

இன்றைய நெருக்கடி மிகுந்த காலகட்டத்தில் நாட்டை முன்கொண்டு செல்வதானால், அரசியல் பேதங்களுக்கு அப்பால் ஒன்றுபடும் பயணமே அவசியம் என்றார்.

1 comment:

Powered by Blogger.