Header Ads



டளஸ் ஜனாதிபதியாகவும், சஜித் பிரதமராகவும் நீங்கள் இணக்கமா..?


டளஸ் அழகப்பெரும ஜனாதிபதியாகவும், சஜித் பிரேமதாச பிரதமராகவும் வருவதற்கு பெயரளவில் இணக்கம் தெரிவிக்கப்பட்டு வருகிறது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்பி தெரிவித்தார். பாராளுமன்ற கட்டிடத்தில் வைத்து நேற்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

ஜனாதிபதி வேட்பாளராக டளஸ் அழகப்பெரும போட்டியிடும் நிலையில் சஜித் பிரேமதாசவும் களமிறங்குகின்றார். ஏன் ஒன்றாக பேச்சுவார்த்தை நடத்தி விட்டு இரண்டு பேரும் வெவ்வேறாக களம் இறங்குகின்றனர்? என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த ரவூப் ஹக்கீம் எம்பி:

வெவ்வேறாக அது தொடர்பில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டாலும், எமது தரப்பினர் பெயரளவில் அதற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர். அதில் ஏதும் பிரச்சினைகள் இருப்பதாக தெரியவில்லை.

அவ்வாறானால் டளஸ் அழகப்பெரும ஜனாதிபதியாகவும் சஜித் பிரேமதாச பிரதமராகவும் வருவதற்கு நீங்கள் இணக்கமா? என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த ரவூப் ஹக்கீம்,

பெயரளவில் அவ்வாறு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. தனிப்பட்ட ரீதியில் எனக்கு வேறு கருத்துக்கள் இருந்தாலும் குழு என்று பார்க்கும் போது அந்த குழுவில் ஒருவன் என்ற வகையில் நாம் குழுவின் பொதுவான தீர்மானத்திற்கு தலை வணங்குவோம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்

No comments

Powered by Blogger.