Header Ads



பாராளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க ரணில் முயற்சி - அனுரகுமார


பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மக்களின் கோரிக்கைக்கு மாறாக ஜனாதிபதியாக பதவியேற்க முயற்சிப்பதாக ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது.

நாட்டை மேலும் அமைதியின்மைக்கு ஆளாக்காமல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது பதவி விலகலை சமர்ப்பிக்கும் முன்னர் ரணில் விக்கிரமசிங்க, தமது பதவி விலகலை சமர்ப்பிக்க வேண்டும் என ஜேவிபி வலியுறுத்தியுள்ளது.

பிரதமர் விக்ரமசிங்க ஜனாதிபதியாக வருவதற்கு முயற்சிப்பது நாட்டில் அமைதியின்மையை மோசமாக்கும் என்று ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சில மாதங்களாக எமக்கு போதுமான குழப்பங்களும் அமைதியின்மையும் ஏற்பட்டிருந்தன.

நாட்டில் தற்போது சகல துறைகளும் முடங்கியுள்ளன. அதற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமரின் பொறுப்பு உள்ளது. எனவே மக்களின் கோரிக்கைக்கு பிரதமர் செவிசாய்த்து இனி எந்த நெருக்கடியையும் தவிர்க்க வேண்டும் என்றும் அனுரகுமார கேட்டுள்ளார்.

சில நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி பெரும்பான்மையுடன் நாடாளுமன்றத்தில் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட பிரதமர் விக்ரமசிங்க சதி செய்வதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்

No comments

Powered by Blogger.