Header Ads



ஈஸ்டர் தாக்குதல் வழக்கிலிருந்து ரணிலின் பெயரை நீக்குமாறு கோரிக்கை


ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்களில் ரணில் விக்ரமசிங்கவின் பெயரை நீக்குமாறு கோரி முன்வைக்கப்பட்ட அடிப்படை எதிர்ப்பு மனு சம்பந்தமாக வாதங்களை முன்வைக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக தெரிவாகியுள்ளதால் வழக்குகளை முன்னெடுத்துச் செல்ல முடியாது

ஈஸ்டர் தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்காத காரணத்தினால், அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக கூறி, தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளதால், அவருக்கு எதிராக வழக்குகளை முன்னெடுத்துச் செல்ல முடியாது எனக் கூறி அவரது சட்டத்தரணிகள் எதிர்மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

அதேவேளை இது தொடர்பாக நாளைய தினம் வாதங்களை முன்வைக்குமாறு மனுக்களில் மற்றுமொரு பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த மனுக்கள் மீதான வழக்கு அண்மையில் விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, ரணில் விக்ரமசிங்க சார்பில் முன்னிலையான சட்டத்தரணி சுரேன் பெர்னாண்டோ, தரப்பு வாதி ஜனாதிபதியாக தெரிவாகி இருப்பதால், அரசியலமைப்புச் சட்டத்தின் 35 வது ஷரத்திற்கு அமைய, அவருக்கு எதிராக வழக்கு விசாரணைகளை முன்னெடுக்க முடியாது என கூறியுள்ளார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, இதற்கு சில தரப்பினர் எதிர்ப்பை முன்வைத்ததன் காரணமாக , அது சம்பந்தமாக நாளைய தினம் வாதங்களை முன்வைக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபாவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.