Header Ads



கோட்டாபய எங்கே..?


இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள தமது அலுவல்பூர்வ மாளிகையில் இருந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியேறியிருக்கிறார். அவரது இல்லத்துக்குள் பலத்த பாதுகாப்பையும் மீறி ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் சனிக்கிழமை பிற்பகலில் நுழைந்தனர்.

இந்த நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஏற்கெனவே பாதுகாப்பான இடத்திற்கு சென்று விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதியின் பாதுகாப்பு வாகன தொடரணி கடற்படை தளத்தை நோக்கிச் செல்லும் காட்சிகளும் அங்கு தயார்நிலையில் இருந்த கப்பலில் ஜனாதிபதி வாகனத்தொடரணியில் இருந்து உடைமைகள் ஏற்றிச் செல்லும் காட்சிகளும் பகிரப்பட்டுள்ளன.

அது ஜனாதிபதி கோட்டாபயவின் இன்றைய காட்சிகளா என்பதை பிபிசியால் சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை. அவர் ராணுவத்தின் பாதுகாப்பில் ரகசிய இடத்தில் தங்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சியைச் சேர்ந்த சில எம்.பிக்கள் ஜனாதிபதி பதவியில் இருந்து கோட்டாபய ராஜபக்ஷ உடனடியாக பதவி விலகுமாறும், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை பெற்ற ஒருவரை நாட்டை வழிநடத்த அனுமதிக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இத்தகைய சூழலில் பிரதமர் கூட்டிய அனைத்து கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள், ஜனாதிபதி பதவியில் இருந்து கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.