Header Ads



எரிபொருள், எரிவாயு தட்டுப்பாட்டிற்கு என்னிடம் தீர்வு உள்ளது


இன்று நாடு எதிர்நோக்கும் எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாட்டிற்கு தன்னிடம் தீர்வு இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

மூன்று மாதங்களுக்குள் இப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் ஏற்படப்போகும் உணவு நெருக்கடியில் இருந்து இலங்கை மக்களை காப்பாற்ற உணவு வழங்கும் வேலைத்திட்டத்தை தயாரிக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இது தொடர்பில் தீர்வு திட்டமோ, வேலை திட்டமோ உள்ளதா என்பதை இன்னும் சில நாட்களில் தெரிந்து கொள்ள முடியும். அவரால் அது முடியாது என்று தெரிந்ததும் எனது பணிகளை ஆரம்பிக்க தயாராக இருக்கிறேன் என அத்துரலியே ரத்ன தேரர் மேலும் தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ரதன தேரர் இக்கருத்தினை வெளியிட்டுள்ளார்.

காவியன்

1 comment:

  1. பயங்கர இனத்துவேசியான இந்த தவளை, இரசாயனப் பசளையை இல்லாமல் செய்து விவசாயத்தை அழித்தது போல நாட்டின் பொருளாதாரத்துக்கு மற்றுமொரு அழிவைக் கொண்டுவர எத்தனிக்கின்றான். இவனை ஆயுட்காலம் வரை சிறையில் அடைத்துவைக்கப்பட வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.