Header Ads



ரணில் ஜனாதிபதியானால் நாடு, மிக மோசமான நிலைக்கு தள்ளப்படும் - மைத்திரிபால

 


தற்போதைய பிரதமர் ஏதேனும் ஒரு வகையில் பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டால், அது மக்கள் அபிலாஷைகளுக்கு புறம்பானதாக அமையும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

அடுத்த ஜனாதிபதியின் தெரிவு அரசியலமைப்பின் பிரகாரம் இடம்பெறுமாயின், தற்போதைய பிரதமர் அடுத்த ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார் என மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டினார்.

எனினும், பிரதமர் பதவி விலக வேண்டும் என்பது நாட்டு மக்களினதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களினதும் பொதுவான கருத்தாக அமைந்துள்ளதாக அவர் கூறினார்.

வரலாற்று புரட்சியை செய்த போராட்டக்களத்தின் அமைப்புகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டே அரசாங்கம் செயற்படவேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

அரசாங்கமும் பாராளுமன்றமும் மேற்கொள்ளும் எத்தகைய நடவடிக்கையாக இருந்தாலும் அரசியல், சமூக ரீதியில் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு போராட்டக்கள செயற்பாட்டாளர்களுடன் கலந்துரையாடி, அவர்களின் கருத்துகளை கவனத்திற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை சபாநாயகருக்கும் அரசாங்கத்தில் பொறுப்புக்கூற வேண்டிய அனைவருக்கும் தெரிவித்துள்ளதாக மைத்திரிபால சிறிசேன மேலும் குறிப்பிட்டார்.

அத்தகைய நடவடிக்கையை தாமதப்படுத்தினால் நாளுக்கு நாள் நாடு மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்தார்.

No comments

Powered by Blogger.