Header Ads



அதிவேக வீதிகளின் நாளாந்த, வருமானம் 70 வீதத்தால் வீழ்ந்தது


அதிவேக வீதிகளின் நாளாந்த வருமானம் சுமார் 70 வீதத்தால் குறைவடைந்துள்ளது.

தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் S. வீரகோன் தெரிவித்தார்.

சராசரியாக அதிவேக வீதிகளின் நாளாந்த வருமானம் 30 மில்லியனுக்கும் அதிகமாகவிருந்தது.

தற்போதைய சூழ்நிலையில் இந்நாட்களில் நாளாந்த வருமானம் 8 மில்லியனாக குறைந்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் S. வீரகோன் சுட்டிக்காட்டினார்.

இந்த நிலை கடந்த ஒரு மாதமாக நாளாந்தம் பதிவாகி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

1 comment:

  1. நாட்டில் அவசர காலச் சட்டம் அமுலில் உள்ளதால் பல ஐரோப்பிய நாடுகள் அவர்களின் குடிமக்களை இலங்கைக்கு பயணம் செய்வது பற்றி எச்சரிக்ைக செய்துள்ளன, அதனால் உல்லாசப் பிரயாணிகளின் வருகை கடுமையாக குறைந்துள்ளது, அது மட்டுமன்றிற தற்போது ரணில் கொண்டு செல்லும் அரசியல் தொடர்ந்தால்,அதிவேக வீதிகளின் வருமானம் இன்னும் குறையும். பொருத்திருந்து பார்ப்போம்.

    ReplyDelete

Powered by Blogger.