Header Ads



3700 மெட்ரிக் டொன் எரிவாயுவுடன் இன்று நாட்டை வந்தடைந்த கப்பல், 2 வது கப்பல் நாளை வரவுள்ளது


எரிவாயு நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைத்து, 3,700 மெட்ரிக் டொன் எரிவாயுவை ஏற்றிக்கொண்டு முதல் கப்பல் இன்று ஞாயிற்றுக்கிழமை நாட்டின் கடல் எல்லையை வந்தடைந்தது.

3,740 மெற்றிக் டொன் எரிவாயு அடங்கிய இரண்டாவது கப்பல் நாளை (11) மாலை வரவுள்ளது.

முதலாவது கப்பல் இன்று (10) பிற்பகல் 03 மணிக்கு கெரவலப்பிட்டியை வந்தடைந்தவுடன் விரைவாக எரிவாயுவை இறக்கி விநியோகிக்கும் பணிகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

3,200 மெட்ரிக் டொன் எரிவாயுவுடன் மூன்றாவது கப்பல் ஜூலை (15) இலங்கையை வந்தடையவுள்ளதுடன், இம்மாதத்திற்காக பெற்றுக்கொள்ள விண்ணப்பம் விடுக்கப்பட்டுள்ள எரிவாயுவின் அளவு 33,000 மெட்ரிக் டொன் ஆகும்.

ஜூலை 12 முதல் எரிவாயு விநியோகம் சீராகவும் முறையாகவும் நடைபெறும் என்றும், இம்மாத இறுதிக்குள் வீட்டு எரிவாயு தேவை தொடர்பான பிரச்சினை முற்றிலும் தீர்க்கப்படும் என்றும் லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் திரு. முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அலுவலகம்

2022.07.10

No comments

Powered by Blogger.