Header Ads



அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக தம்மிக்க..? Mp ஆவது உறுதியானது


பிரபல வர்த்தகரான தம்மிக பெரேரா, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து கொண்டு, அதற்கான அங்கத்துவ அட்டையை பெற்றுக்கொண்டார்.

இதனை, பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் வழங்கிவைத்தார்.

இந்நிலையில், தம்மிக பெரேராவின் பெயர், தேர்தல்கள் திணைக்களத்துக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் வெற்றிடமாக இருக்கும் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை நிரப்பவே, தம்மிக்கவின் பெயர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

அதுதொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல், வெளியானதன் பின்னர் அவர், எம்.பியாக சத்தியப்பிரமாணம் செய்துக்கொள்வார்.

அத்துடன்,தான் வகிக்கும் சகல பதவிகளில் இருந்தும் விலகியதன் பின்னரே எம்.பி பதவியை ஏற்றுக்கொள்வேன் என, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் அவர் தெரிவித்திருந்துள்ளார்.

அதுமட்டுமன்றி, அவருக்கு முக்கியமான அமைச்சர் பதவியொன்றும் வழங்கப்படவுள்ளது.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக களமிறக்கும் வகையிலேயே தம்மிக்க பெரேரா, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்குள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments

Powered by Blogger.