Header Ads



ஜனாதிபதியை மேலும் பலப்படுத்த திட்டம், ரணிலின் சதிகளை அம்பலப்படுத்தும் இம்தியாஸ் Mp


 உத்தேச 21 ஆவது திருத்தம் தொடர்பில் ஐக்கி மக்கள் சக்தியின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் முகமாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று(02) பிற்கபல் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் தெரிவித்த கருத்துக்கள்.

சட்டத்தரணிகள் சங்கம், நாட்டிலுள்ள நிபுணர்கள், மதத்தலைவர்கள், இளைஞர் யுவதிகள் என அனைவரும் கோரிய திருத்தத்தையே ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்றத்தில் முன்வைத்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்த 21 ஆவது திருத்தத்தையே நாடாளுமன்றமும் ஏற்றுக்கொண்டுள்ளது. முதல் வாசிப்பும் முன்னோக்கிச் சென்றுள்ளது. எனவே, இரண்டாவது வாசிப்புக்கு எடுத்து விரைவில் அனுமதியையும் பெற்றுக்கொள்ள முடியும். 

இதற்கு தெரிவு குழுவின் போது திருத்தங்களை கொண்டுவர முடியும். அதனை விடுத்து எதற்காக இதனை தாமதப்படுத்துவதற்கு ஏமாற்று வேலைகளை முன்னெடுக்க வேண்டும். மக்கள் கோரியதை நாங்கள் முன்வைத்துள்ளோம்.

No comments

Powered by Blogger.