Header Ads



போதை பொருளுக்கு எதிராக திரண்டுள்ள புத்தளம்


- இர்ஷாத் ராஹுமத்துல்லா 

போதை  பொருள் பாவனைக்கு எதிரான தினத்தை சர்வேதேச தினமாக நினைவு படுத்துவதை கடந்து இதற்கான  செயற்ப்பாடுகள் முன்னெடுக்கப்பட  வேண்டும்  என  புத்தளம்  நகர சபை  தலைவர் எம்.எஸ். எம். ரபீக் தெரிவித்தார். 

சர்வேதேச போதைப்பொருள்  எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு ஜாயிற்றுக் கிழமை புத்தளம்   நகர மண்டபத்தின் மர்ஹூம் பாயிஸ் அரங்கில் இடம் பெற்ற  நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு கூறினார். 

மேலும் அங்கு கருத்துரைக்கும் போது :-

போதை பொருள் பாவனையாளர்களை சமூகம் தாக்குதல் மூலம் தண்டிக்கமுட்படக்கூடாது. மாற்றமாக அவர்கள் புனர்வாழ்வளிக்க  வேண்டும். 

புத்தளம் பிரதேச சபை பிரிவில்  முள்ளிபுரம், பாலாவி பகுதிகளில் புனர்வாழ்வு நிலையங்கள் அமைக்கப்படல் வேண்டும். 

தற்போதைய்யா  இந்த நிலையில் இருந்து மக்களை பாதுகாக்க பலர் முன்வந்துள்ளனர்.இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். 

இதேபோல் நகர சபையின் வட்டார ரீதியில் குழுக்கள் அமைக்கப்பட்டு அதன் மூலம் தொடர் விழிப்புணர்வுகளை முன்னெடுப்பது அவசியமாகும். இதற்கான  உதவிகளை நாம் வழங்க தயாராகவுள்ளோம் என்றும் நகர சபை  தலைவர் கூறினார்.

No comments

Powered by Blogger.