இடர் முகாமைத்துவ அதிகாரி, நீரில் அடித்துச்செல்லப்பட்டு உயிரிழப்பு
நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய வானிலை காரணமாக ஏற்பட்ட வௌ்ளத்தில் மூழ்கி இரத்தினபுரியில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இரத்தினபுரி – குருவிட்ட பிரதேசத்தில் நீரில் அடித்துச்செல்லப்பட்டு 40 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (31) பணி முடிந்து வீடு திரும்பிய போதே அவர் இந்த அனர்த்தத்திற்கு உள்ளாகியுள்ளார்.
உயிரிழந்தவர் கிரிஎல பிரதேச செயலாளர் பிரிவின் இடர் முகாமைத்துவ அதிகாரியாக பணியாற்றியவர் என இரத்தினபுரி மாவட்ட செயலாளர் மாலனி லொகு பொதாகம தெரிவித்தார்.
Post a Comment