Header Ads



பாடசாலை சிறார்களுக்கு சீனாவின் அரிசி


நாட்டில் நிலவும் உணவு நெருக்கடி சூழ்நிலையை கவனத்திற் கொண்டு பாடசாலையில் கல்வி கற்கும் சிறுவர்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காக, சீனா ஆயிரம் மெற்றிக் தொன் அரிசியை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.  

நன்கொடையாக வழங்கப்பட்ட அரிசித்தொகை 44கொள்கலன்களில் சீனாவிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு கல்வி அமைச்சிடம் நேற்று உத்தியோகபூர்வமாக கையளித்துள்ளதாக கொழும்பிலுள்ள சீனத் தூதரகம் தெரிவித்தது.  

நாடுமுழுவதுமுள்ள 7, 900பாடசாலைகளில் கல்வி பயிலும் 11இலட்சம் பாடசாலை சிறார்களுக்கு அவற்றை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் ஆறு மாத காலத்துக்கு அந்த அரிசியை பகிர்ந்தளிக்கவுள்ளதாகவும் சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.  

அத்துடன் மேலும் இரு தொகுதிகளாக அரிசியை பெற்றுக்கொடுப்பதற்கு சீன அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் எதிர்வரும் வாரங்களில் அது இலங்கைக்கு கிடைக்குமென்றும் சீன தூதரகம் தெரிவித்துள்ளது.  

அதற்கு மேலதிகமாக பாடசாலை மாணவர்களுக்கான சீருடைகளை நன்கொடையாக வழங்குவதற்கும் கல்வி அமைச்சுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் சீன தூதரகம் தெரிவித்துள்ளது. 

லோரன்ஸ் செல்வநாயகம்  

No comments

Powered by Blogger.