ரஷ்ய விமானத்திற்குள் புகுந்து, அச்சுறுத்திய இலங்கை அதிகாரிகள் - அமைச்சர் விஜேதாச
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ரஷ்யாவுக்கு சொந்தமான விமானத்தினால் பெரும் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தடுத்து வைக்கப்பட்ட ஏரோப்லோட் விமானத்திற்கு சென்ற இலங்கை அதிகாரிகள் சிலர் அங்கிருந்தவர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்தமை அம்பலமாகி உள்ளன.
நிதி அதிகாரி மற்றும் சட்டத்தரணி ஒருவரும் விமானி அறைக்குச் சென்று விமான தலைமை அதிகாரியை அச்சுறுத்தியமை தெரியவந்துள்ளதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மோசமாக நடந்து கொண்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நீதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இந்த சம்பவத்தினால் ரஷ்யாவிற்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு இலங்கை தனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துள்ளது.
ரஷ்ய தூதுவருடனான சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் செயற்படுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக நீதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment