Header Ads



கோத்தபய, ரணில் பகைமை முற்றுகிறது, புதிய அரசாங்கத்திற்கு தலைமைத்துவம் வழங்க நான் தயார் - MY3


தற்போதைய அரசாங்கம் தீர்வுகளை வழங்க கூடிய அரசாங்கமாக எவரும் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் புதிய அரசாங்கம் ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதற்கு தலைமைத்துவத்தை வழங்க நான் தயார் என்றும் முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.


இவ்வாறு அமைக்கப்படும் புதிய அரசாங்கத்தின் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் முடியுமாக இருக்கும் என்பதுடன் சர்வதேசத்தின் ஒத்துழைப்பு கிடைக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


கொழும்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.


அரச தலைவருக்கும் பிரதமருக்கும் இடையிலான பகைமை ஒரு போட்டியாக மாறி உள்ளது .


நான் அரச தலைவராகவும் ரணில் விக்ரமசிங்க பிரதமராகவும் இருந்த போது காணப்பட்ட அதே நிலைமை தற்போது இருவருக்கும் இடையில் காணப்படுகிறது. IB

No comments

Powered by Blogger.