Header Ads

முஸ்லிம் கட்­சி­க­ளாலும், முஸ்லிம் அர­சியல்வாதி­க­ளாலும் சமூ­கத்­துக்கு பயன் இல்லை


(ஏ.ஆர்.ஏ.பரீல்)

அல்­லாஹு அக்பர் என்று கூறிக்­கொள்ளும் கட்­சி­களே 20 ஆவது திருத்­தத்­துக்கு ஆத­ரவு வழங்கி நாட்டில் சர்­வா­தி­கார ஆட்­சிக்கு வழி­வ­குத்­தன. இந்த சர்­வா­தி­கார அதி­காரம் கார­ண­மா­கவே முஸ்­லிம்கள் பாதிக்­கப்­பட்­டனர் என சுதந்­திரக் கட்­சியின் உப தலை­வரும் முன்னாள் அமைச்­ச­ரு­மான பைஸர் முஸ்­தபா தெரி­வித்தார்.

அத்­தோடு, ஜனா­தி­பதி பாது­காப்பு அமைச்சைத் தவிர வேறு எந்­த­வொரு அமைச்சுப் பத­வியும் வகிக்கக் கூடாது. அமைச்­சு­க-­ளுக்­கான செய­லா­ளர்கள், பொது சேவையைச் சேர்ந்­த­வர்­களே நிய­மிக்­கப்­ப­ட­வேண்டும். இரா­ணுவ நிய­ம­னங்கள் வழங்­கப்­ப­டக்­கூ­டாது. ஜனா­தி­பதி பொது மன்­னிப்பு வழங்­கு­வ­தற்கு முன்பு ஆலோ­சனைச் சபையின் ஆலோ­ச­னையைப் பெற்­றுக்­கொள்ள வேண்டும் என்­பன உட்­பட 10 திருத்­தங்­களை 21 ஆவது திருத்த சட்ட மூலத்­துக்கு ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி பரிந்­துரை செய்­துள்­ளது என்றும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

கொழும்பு இரா­ஜ­கி­ரியவில் அமைந்­துள்ள கட்­சிக்­கா­ரி­யா­ல­யத்தில் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யிலே பைஸர் முஸ்­தபா இவ்­வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில் “மாகா­ணங்­க­ளுக்­கான ஆளுநர் நிய­மனம், வெளி­நாட்டு தூது­வர்கள் நிய­மனம் என்­ப­ன­வற்றில் ஜனா­தி­பதி பிர­த­மரின் ஆலோ­ச­னை­களைப் பெற்­றுக்­கொள்­வ­துடன் அமைச்­ச­ர­வை­யையும் கலந்­தா­லோ­சிக்க வேண்டும். 21 ஆவது திருத்தச் சட்­டத்­துக்கு அனை­வரும் ஆத­ர­வ­ளிப்­பார்கள் என்ற நம்­பிக்கை எமக்கு இருக்­கி­றது. 19 ஆவது திருத்த சட்­டத்தில் உள்­ள­டங்­கப்­பட்­ட­வை­களே 21 ஆவது திருத்­த­சட்­டத்தில் அமை­வது பொருத்­த­மா­னது. இது சிறு­பான்மை சமூ­கத்­துக்கும் அனைத்து மக்­க­ளுக்கும் பாது­காப்­பா­ன­தாகும்.

21 ஆவது திருத்தம் கொண்டு வரப்­ப­ட­வேண்டும் என்­பது மக்­களின் ஏகோ­பித்த கருத்­தாகும். 21 ஆவது திருத்­தத்­துக்கு ஆத­ர­வ­ளிக்­காத மக்கள் பிர­தி­நி­தி­க­ளுக்கு மக்கள் அடுத்த பொதுத் தேர்­தலில் பாடம் புகட்­டு­வார்கள். ஜனா­தி­பதி வீட்­டுக்குச் செல்­ல­வேண்டும் என்­பதும் மக்­களின் கோரிக்­கை­யாகும். என்­றாலும் அர­சி­ய­ல­மைப்­பின்­படி ஜனா­தி­பதி பதவி வில­கினால் பாரா­ளு­மன்­றத்தில் பெரும்­பான்மை பலம் உள்ள கட்­சி­யான பொது­ஜன பெர­முன கட்­சி­யி­லி­ருந்தே ஜனா­தி­பதி ஒருவர் தெரிவு செய்யும் வாய்ப்பு இருக்­கி­றது.

முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக செயற்­பட்ட கட்­சிக்கு முஸ்லிம் கட்­சி­களின் பிர­தி­நி­திகள் உத­வி­ய­த­னா­லேயே 20 ஆவது திருத்தம் அவர்­களின் ஆர­த­வுடன் அமு­லுக்கு வந்­தது. ரிசாத் பதி­யுதீன், ஹக்­கீமின் கட்­சி­களே இதற்கு கார­ண­மாக அமைந்­தன. அல்­லாஹு அக்பர் என்று கூறிக்­கொள்ளும் கட்­சி­களே 20 ஆவது திருத்­தத்­துக்கு ஆத­ரவு வழங்கி நாட்டில் சர்­வா­தி­கார ஆட்­சிக்கு வழி­வ­குத்­தன. இந்த சர்­வா­தி­கார அதி­காரம் கார­ண­மா­கவே முஸ்­லிம்கள் பாதிக்­கப்­பட்­டனர். கொவிட் 19 தொற்­றினால் மர­ணித்­த­வர்­களின் ஜனா­ஸாக்­களை அடக்கம் செய்­வ­தற்கு முடி­யு­மாக இருந்த போதும் ஜனா­தி­பதி தனது அதி­கா­ரத்தைப் பயன்­ப­டுத்தி ஜனா­ஸாக்­களை அடக்கம் செய்ய அனு­மதி வழங்­காமல் இருந்தார். 20க்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்த முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களால் கூட அனு­ம­தியைப் பெற்றுக் கொள்ள முடி­யாமற் போனது.

முஸ்­லிம்கள் என்ற பெயர் பல­கை­யுடன் கூடிய கட்­சி­க­ளா­லேயே நாட்டின் இன வாதம் தூண்­டப்­ப­டு­கி­றது. முஸ்­லிம்கள் பெரும்­பான்மை கட்­சி­க­ளுக்கே வாக்­க­ளிக்க வேண்டும். முஸ்லிம் கட்­சி­க­ளாலும் முஸ்லிம் அர­சியல்வாதி­க­ளாலும் சமூ­கத்­துக்கு பயன் இல்லை. நல்­லாட்சி அர­சாங்­கத்தில் இருந்த ஒரு முஸ்லிம் அமைச்­சரின் கீழ் 50 நிறு­வ­னங்கள் இருந்தன. என்றாலும் அவரால் சமூகத்துக்கு பயனுள்ள எந்த செயற்திட்டங்களையும் முன்னெடுக்க முடியாமற்போனது. அரசியல்வாதிகளால் தொடர்ந்தும் மக்களை ஏமாற்ற முடியாது. இன்று மக்களின் ஏகாதிபத்திய அதிகாரமே ஓங்கி இருக்கின்றது. அதனால்தான் 5 வருட காலத்துக்குப் பிரதமராக நியமிக்கப்பட்டிருந்த மஹிந்த ராஜபக்ஷ மக்களின் எதிர்ப்பினால் பதவி விலக வேண்டியேற்பட்டது. – Vidivelli

1 comment:

  1. கடந்த பல மாதங்களாக (பொந்துகளில்) மறைந்திருந்த பைசர் முஸ்தபா போன்ற முஸ்லிம் ஏமாற்று அரசியல் பாம்புகள், மீண்டும் அரசியலுக்கு வருவதற்கு முஸ்லிம் வாக்காளர்கள் மத்தியில் அரசியல் அனுதாபத்தை மீனவெடுக்க தகுந்த நேரத்தில் வெளிவரத் தொடங்கியுள்ளனர். முதலாவதாக, அரசாங்கம் (கோட்டா மற்றும் ரணில்), சி.ஐ.டி மற்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம், பைசர் முஸ்தபா போன்றவர்களின் அனைத்து சொத்துக்களையும், அரசியல் வியாபாரம், கிக்பேக் மூலம் வியக்கவைக்கும் இதர முஸ்லிம் அரசியல் தலைவர்களின் சொத்துக்கள் அனைத்தையும் விசாரிக்கும் பொறிமுறையை ஏற்படுத்த வேண்டும். , கமிஷன்கள், மோசடிகள், கல்பிட்டி மற்றும் பாசிக்குடாவில் சுற்றுலாத் திட்டங்களை அமைத்து "சட்டத்தின் ஆட்சிக்கு" முன் கொண்டு வருவதற்கு பொய்யான ஆவணங்கள் மூலம் கிரீடம் நிலத்தை வாரிசு செய்தல். முஸ்லீம் வாக்காளர்கள் "அப்பாவிகள்" மற்றும் அடக்கமானவர்கள் மற்றும் பல ஆண்டுகளாக இந்த முனாபிக்களால் தவறாகப் பயன்படுத்தப்படுகிறார்கள். போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட தீய செயல்களில் ஈடுபடும் பெரிய முஸ்லீம் வணிகர்கள் மற்றும் வர்த்தகர்களால் அவர்களுக்கு ஆதரவளிக்கப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக கடந்த காலங்கள் பல உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளன, ஆனால் "அரசியல் பங்காளித்தனம்" ஊடகங்கள் அனைத்தையும் முழுமையாக மூடிமறைப்பதையும் இந்த முனாக்கிகளின் சாக்குப்போக்குகளை மட்டுமே வெளியிடுவதையும் தடுக்கிறது. சமூக ஊடகங்கள் மற்றும் யூடியூப் சேனல்கள் உட்பட அனைத்து ஊடகங்களிலும் இந்த உண்மைகள் "விளம்பரப்படுத்தப்பட" வேண்டிய நேரம் இது, இதனால் முஸ்லிம்கள் "புதிய, இளம் மற்றும் நேர்மையான முஸ்லிம் அரசியல் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும்.
    Noor Nizam - Peace and Political Activist, Political Communications Researcher, SLFP/SLPP Stalwart, Convener "The Muslim Voice".

    ReplyDelete

Powered by Blogger.