Header Ads



மாதம்பை இஸ்லாஹிய்யாவுக்கு புதிய, மாணவர்களை இணைப்பதற்கான விண்ணப்பம் கோரல்


மாதம்பை இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரியில் 2022ஆம் ஆண்டுக்கு புதிய மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

கடந்த 2021ஆம் ஆண்டு மற்றும் இவ்வருடம் 2022ஆம் ஆண்டு G.C.E. O/L பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இவ்வருடம் G.C.E. O/L எழுதிய மாணவர்கள்  விண்ணப்பிக்கும் போது மாணவர்களின் தரம் 10 மற்றும் தரம் 11ற்குரிய  முன்னேற்ற அறிக்கை (Report Card) O/L Results Sheet இற்கு பதிலாக கொள்ளப்படும்.

பின்வரும் பாடநெறிகளுக்கு புதிய மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.

1. DIPLOMA IN ARABIC & ISLAMIC STUDIES (COMMERCE STREAM) – (மூன்று வருடம்)

2. LICENTIATE IN ARABIC & ISLAMIC STUDIES (ARTS STREAM) – (ஐந்து வருடம்)

ஐந்து வருடங்களைக் கொண்ட LICENTIATE COURSE IN ARABIC கற்கைநெறியில் அல்குர்ஆன், அல்ஹதீஸ், உயர் தர ஷரீஆ, உயர் தர அரபு மொழி, இஸ்லாமியக் கலைகள், ஆங்கில மொழி, தகவல் தொழில்நுட்பம், தேர்வுப் பாடங்கள் ஆகியன கற்பிக்கப்படுகின்றன.

க.பொ.த (உ/த) பரீட்சை கலைத்துறையில் பின்வரும் பாடங்களை தெறிவு செய்ய முடியும்

1. Arabic Language

2. Islamic Civilization

3. Political Science

4. ICT

5. Economics

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகம் ஒன்றில் கலைமாணி பட்டப் பரீட்சை (வெளிவாரி)  மாணவர்கள் தயார்படுத்தப்படுவார்கள்.

இதற்கு மேலதிகமாக திறமையான மாணவர்களுக்கு வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் உயர் கல்வியைத் தொடர்வதற்கான புலமைப் பரிசில்கள் ஏற்படுத்திக் கொடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

துறை சார் கற்கைகளுக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இலங்கை பல்கலைக் கழகங்கள் (வெளிவாரி கற்கை) தாம் விரும்பிய கற்கை நெறிகளை வெளிவாரியாக சனி,ஞாயிறு தினங்களில் மேற்கொள்வதற்கான சந்தர்ப்பமும் வழங்கப்படும்.

இதேவேளை கல்லூரியின் இன்னொரு பிரிவாக வர்த்தகத் துறை காணப்படுகிறது இது மூன்று வருடங்களைக் கொண்ட DIPLOMA IN ARABIC & ISLAMIC STUDIES கற்கை நெறி ஆகும்.

 இதில் அல்குர்ஆன், அல்-ஹதீஸ், அரபு மொழி, இஸ்லாமியக் கலைகள், ஆங்கில மொழி, தகவல் தொழில்நுட்பம், தலைமைதுவகற்கை,  போன்ற பாடங்களுடன் க.பொ.த (உ/த) பரீட்சை வர்த்தகத் துறையில் பின்வரும் பாடங்களை தெறிவூ செய்ய முடியூம்

1. Accounting

2. Economics

3. Business Studies

4. ICT

பதிவுகளுக்கு:

பின்வரும் Google Form இனை பூரணப்படுத்துங்கள்

https://forms.gle/wVjeHRPgznCdHBVh7

அல்லது நேர்முகப்பரீட்சைக்கு நேரடியாக சமூகம் தரவும் முடியும்

புதிய மாணவர்களை இணைப்பதற்கான நேர்முகப் பரீட்சை ஜூலை மாதம் 24 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாதம்பை இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரி வளாகத்தில்  இடம்பெறவுள்ளது.

ஆழமான இஸ்லாமிய அறிவும் ஆன்மிகப் பண்புகளும் துறைசார்ந்த அறிவு, திறமைகளும்கொண்ட சிந்தனையாளர்கள், சமூகத் தலைவர்கள், திட்ட முகாமையாளர்கள், ஊர்மட்டத்தலைவர்கள், வழிகாட்டிகள், சமூக ஆய்வாளர்கள் போன்றோரை உருவாக்கும் பணியில் கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக மாதம்பை இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரி ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புகளுக்கு:

077 264 9152,

032 22 47786


வட்ஸ்அப் -

077 550 4740

076 701 5013

No comments

Powered by Blogger.