Header Ads



பிள்ளைகள் சுமையாகத் தெரிந்தால், அவர்களை கொலை செய்யாதீர்கள் - அருகில் உள்ள பொலிஸாரிடம் ஒப்படையுங்கள்


பிள்ளைகள் சுமையாகத் தெரிந்தால் அவர்களை கொல்ல வேண்டாம் எனவும், அருகாமையில் உள்ள பொலிஸாரிடம் ஒப்படைக்குமாறும் பொலிஸார் பெற்றோரிடம் கோரியுள்ளனர்.

பிள்ளைகளை வளர்க்க முடியாத நெருக்கடி நிலைமை காணப்பட்டால் அவர்களை கொன்றுவிட வேண்டாம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

பிள்ளைகளை வளர்ப்பதில் சிரமங்கள் காணப்பட்டால் அருகாமையில் உள்ள பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவில் பிள்ளைகளை ஒப்படைக்குமாறு கோரியுள்ளார்.

இவ்வாறு ஒப்படைத்தால் பெற்றோருக்கு பொலிஸார் உதவுவர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று முன்தினம் களனி பிரதேசத்தில் தாய் ஒருவர் ஐந்து வயதான பிள்ளையை களனி ஆற்றில் வீசி வீட்டு தாமும் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்திருந்தார்.

அயலவர்கள் குறித்த பெண்ணை காப்பாற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. TW


No comments

Powered by Blogger.