Header Ads



கோட்டாபய, ரணிலை விரட்டிவிட்டு, பாராளுமன்றத்தையும் சுத்தப்படுத்திவிட்டே வீடு செல்வோம் - காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் சூளுரை


கோட்டாபயவையும் ரணிலையும் விரட்டுவது மட்டுமன்றி நாடாளுமன்றத்தையும் சுத்தப்படுத்தி விட்டே செல்லப்போவதாக காலி முகத்திடல் போராட்டகாரர்கள் எச்சரித்துள்ளனர்.

காலிமுகத்திடலில், 74 வது நாளாக முன்னெடுத்து செல்லப்படுகின்ற நிலையில் போராட்டக்காரர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி  ஏற்பட்டுள்ளது.

எனினும் இது உண்மையான வீழ்ச்சியல்ல என்று போராட்டக்களத்தின் முக்கியஸ்தர் ஒருவர் எமது TW  சேவைக்கு தெரிவித்துள்ளார்.

“எங்களுடன் போராட்டத்தில் ஈடுபடுவோரின் வருகை சற்றுக் குறைந்துள்ள சூழ்நிலையை காணக்கூடியதாக உள்ளது”

“இதற்கு காரணம் மக்களுக்கு எங்களுடைய போராட்டக் களம் சலிப்படைந்து விட்டது. அல்லது கோட்டா கோ கம வெறுத்து போய்விட்டது. என்பது அர்த்தமல்ல” 

போராட்டத்துக்கு . மக்கள் தமது பங்களிப்பினை தர முடியாமைக்கும் அரசாங்கமே காரணம். ஏனெனில் மக்கள் தமக்கு தேவையான எரிபொருட்களை பெற்றுக்கொள்வதற்கு மணிக்கணக்கில் வரிசைகளில் நிற்கின்றார்கள். இதனால் அவர்களால் போராட்டத்தில் பங்கெடுக்க முடியவில்லை.

மண்ணெண்ணெய் , டீசல் பெறுவதற்கும் எரிவாயு கொள்கலன்களை பெறவும் நாட்கணக்கில் இரவு பகலாக வரிசையில் நிற்கின்றனர்.

இதுமட்டுமன்றி பால்மாவுக்காக அத்தியாவசிய உணவுகளுக்காகவும் நிற்கின்றனர்.

அரிசி தற்போது ஒருவருக்கு 5 கிலோ என்ற அளவில் வழங்கப்படுகிறது. இன்னும் நாட்களில் சில நாட்களில் அரிசிக்கும் வரிசையில் நிற்கவேண்டிய நிலை ஏற்படும். 

எனவே பொதுமக்கள் போராட்டங்களில் பங்கு பற்றுவதற்கு விருப்பத்துடன் இருந்தாலும், அவர்களின் குடும்ப பொருளாதார நிலைமை மற்றும் அரசாங்கம் செய்யும் முறையற்ற வேலைகள் காரணமாக அவர்களுக்கு போராட்டக்களத்திற்கு பங்குபற்ற நேரம் இல்லை.

எனினும், கோட்டாபய வையும் ரணிலையும் விரட்டுவது மட்டுமன்றி நாடாளுமன்றத்தையும் சுத்தப்படுத்தி விட்டே நாங்கள் செல்வோம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், விவசாயத்துறையில் உள்ளவர்கள் அல்லது வைத்தியதுறையில் உள்ளவர்கள் உட்பட்ட துறைசார் அனுபவம் வாய்ந்தவர்களுடன் இணைந்து நாட்டின் அரசியல் முன்னெடுக்கப்படும் என்றும் அந்த போராட்டக்காரர் குறிப்பிட்டுள்ளார்.


No comments

Powered by Blogger.