Header Ads



இனிமேல்தான் மோசமான நிலை ஏற்படப்போகிறது - பிரதமர்


நாடு இனி வரும் காலங்களிலேயே மோசமான நிலையை எதிர்நோக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று (3) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.

பெரும்போகம் மற்றும் சிறுபோகத்திற்கு போதுமான உரம் காணப்படவில்லை எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், எதிர்வரும் பெரும்போகத்திற்கான உரத்தைப் பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு உரம் கிடைக்கப்பெற்றால் எதிர்வரும் ஆண்டின் பெப்ரவரி மாதம் வரை சமாளிக்கக்கூடியதாகவிருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், சுயமாக இலங்கையினால் இந்த ஆண்டை முழுமையாகக் கடக்க முடியாது எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், நாட்டுக்கான உணவு பொருட்கள் விநியோக நடவடிக்கைகள் எதிர்வரும் செப்டெம்பர் மற்றும் ஒக்டோபர் மாதம் வரை போதுமானதாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


1 comment:

  1. இந்த நாட்டு படிக்காத விவசாயி முதல் சாதாரண மக்கள் வரையில் இந்த நாட்டின் தற்போதைய பொருளாதாரம், பொருட்களின் தட்டுப்பாடு பற்றியும் இனிவரப்போகும் காலத்தின் சிக்கலான நிலைமைகள் பற்றியும் இந்த நாட்டின் பிரஜைகள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும்.அதைச் சொல்லி மீண்டும் மக்களைத் தூண்டிவிட பிரதமர் ஒருவர் அவசியமில்லை.முடியுமானால் உமது மச்சான் அங்குமிங்கும் பதுக்கிவைத்துள்ள நாட்டுமக்களின் கோடான கோடி டொலர்களை பெற்று நாட்டின் பிரச்சினைகளைத் தீர்த்து மக்களுக்கு நிவாரணம் கொடுக்க முயற்சி செய்யவும். அந்த முயற்சிகளை மட்டும் தான் இந்த நாட்டு மக்கள் உங்களிடம் எதிர்பார்த்திருக்கின்றார்கள். அதுதவிர தேவையற்ற பேச்சுக்களை தவிர்த்து நாட்டு மக்களின் பிரச்சினைகளை எவ்வாறு தீர்க்கலாம் என்றவிடயத்தில் ஆக்கபூர்வமான செயல்திட்டத் தைப் போட்டு தீவிரமான செயல்படுவதைத்தான் இந்த நாட்டு மக்கள் பிரதமரிடம் எதிர்பார்க்கின்றனர்.

    ReplyDelete

Powered by Blogger.