Header Ads



இலங்கையில் இருந்து ஹஜ்ஜூக்கு அனுப்புவது குறித்து, சாதக முடிவு எட்டப்பட்டுள்ளதா..?


புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவது மற்றும் இதிலுள்ள நடைமுறைச்சிக்கல்களை களைவது தொடர்பான முக்கிய கூட்டம், கலாசார அலுவல்கள் மற்றும் புத்தசாசன அமைச்சர் விதுரவிக்ரமநாயக்க தலைமையில் இன்று (07) அமைச்சில் நடைபெற்றது.

 நாட்டில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி மற்றும் டொலர் பற்றாக்குறைக்கு மத்தியில் ஹஜ் செல்வோருக்கான ஏற்பாடுகளை செய்வது குறித்து இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. இதில், சுற்றாடல்துறை அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் மற்றும் பாரளுமன்ற உறுப்பினர்களான  முஷர்ரப் முதுநபீன், மர்ஜான் பளீல், காதர் மஸ்தான், பைஸல் காஸிம், இஷாக் ரஹ்மான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் ஹஜ் முகவர் நிறுவனங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர். 

 அந்நியச் செலாவணியை ஈட்டிக்கொள்வதில் நாடு எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு மத்தியில், அதிகளவான நிதி வௌிப்பாய்வதில் உள்ள நிலைமைகள் பற்றியும் இக்கூட்டத்தில் ஆராயப்பட்டது.

எனினும் இந்த கூட்டத்தில் ஹஜ்ஜூக்கு அனுப்புவது சம்பந்தமாக  சாதகமான முடிவு எட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. தலையில்லாத முஸ்லிம் கலாசார திணைக்களம் நேரத்தையும் பணத்தையும் தேவையில்லாத வழியில் செலவழிக்காது நாட்டின் தற்போதைய மக்களின் அடிப்படைத்தேவையைக் கவனத்தில் கொண்டு ஹஜ் செய்ய வைத்திருக்கும் பணம் அனைத்தையும் சேர்த்து அவரவர் ஊர்களில் வசிக்கும் ஏழை மக்களுக்கு அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்ய வழங்கினால் அதுதான் தற்போது செய்யும் பெரிய ஹஜ் ஆகும் என்பதை இந்த ஜம்இய்யதுல் உலமா குறிப்பாக ஹஜ் செய்வற்கு தயாரானவர்களுக்கும் ஏனைய பொதுமக்களுக்கும் உணர்த்த வேண்டும். ஹஜ் கடமையாகுவதற்கு من استطاع اليه سبيلا என்ற அல்குர்ஆன் வசனம் அதைத்தான் சுட்டிக்காட்டுகின்றது. ஹஜ் செல்வதற்கு வசதிபடைத்தவர்கள் எனக்கூறும் போது வசதியில்லாதர்கள் நம்மைச் சூழ வாழும் போது நாம் வசதியாகப் போய்வரமுடியாது.

    ReplyDelete

Powered by Blogger.