Header Ads



எரிபொருள் வரிசையில் நின்றிருந்த யுவதி, தனது பிறந்த​நாளை கொண்டாடினார்


எரிபொருள் வரிசையில் நின்றுகொண்டிருந்த போதே, தன்னுடைய  பிறந்த​நாளை யுவதியொருவர் கேக் வெட்டி கொண்டாடிய சம்பவமொன்று வெலிகம சிப்பெட்​கோ எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.

அந்த யுவதியின் பிறந்தநாளான ஜூன் 19ஆம் திகதியன்று, ​​ஸ்கூட்டரின் மேல் கேக் வைத்து வெட்டப்பட்டுள்ளது.

வரிசையில் நின்றிருந்த ஏனையோரும், வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டியை அலங்கரித்து, கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.

No comments

Powered by Blogger.