Header Ads



நாம் எத்தனை வேளை சாப்பிட வேண்டுமென முடிவுசெய்ய, நாட்டுக்கு ஒரு பிரதமர் தேவையில்லை - அனுகுமார சாட்டையடி


சிறு போக பயிர் செய்கைக்கு உரிய நேரத்தில் இரசயான பசளைகளை வழங்காது தம்பட்டம் அடிக்கும் கோட்டா - ரணில் இரட்டையர், எதிர்காலத்தில் ஏற்பட போகும் உணவு நெருக்கடி வழங்க போகும் தீர்வு என்ன என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

உணவு தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில் மக்கள் எத்தனை வேளைகள் சாப்பிட வேண்டும் என்று முடிவு செய்ய பிரதமர் அவசியமில்லை

குறிப்பாக எதிர்காலத்தில் உணவு நெருக்கடி ஏற்படும் என்ற கடும் அச்சத்திலும் உணர்விலும் பொதுமக்கள் இருக்கின்றனர்.

நாட்டில் நிலவு பொருளாதார நெருக்கடியை காரணம் காட்டி ஜனாதிபதி கமதொழில் தொடர்பாக எடுத்த தவறான முடிவுகள் காரணமாக உணவு பற்றாக்குறை ஏற்படும் நிலைமையை நாடு தற்போது எதிர்நோக்கி வருகிறது.

நெருக்கடிக்கு சரியான தீர்வை தேடி, உணவு உற்பத்திக்காக அரசாங்கம் வேலைத்திட்டத்தை முன்வைக்க தவறியுள்ளது. இதனால், அரசாங்கத்தில் இருக்கும் பொறுப்புக் கூற வேண்டியவர்கள் மீண்டும் வழமை போல் பொறுப்பற்ற வகையில் பல்வேறு கதைகளை கூறி வருகின்றனர்.

இதன் மூலம் நாட்டுக்கு தொடர்ந்தும் அனர்த்தமே ஏற்படும். சிறு போக பயிர் செய்கை ஆரம்பித்து குறிப்பிடத்தக்களவு காலம் கடந்துள்ளது. தேவையான இரசாயன பசளைகள், கிருமி நாசனிகள் இல்லை.

விவசாயத்திற்கு தேவையான பசளை உள்ளிட்டவற்றை வழங்க நடவடிக்கை எடுக்காத அரசாங்கம் தேசிய சேதனப் பசளை உற்பத்தியாளர்களிடம் இருந்து பெற்றுக்கொண்ட பசளைக்கான பணத்தையும் இதுவரை செலுத்தவில்லை.

எத்தனை வேளைகள் சாப்பிட வேண்டும் என்று முடிவு செய்ய பிரதமர் அவசியமில்லை

நாடு எதிர்நோக்கி இருக்கும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண சரியான வேலைத்திடடத்தை முன்வைக்க கோட்டா - ரணில் அரசாங்கம் தவறியுள்ளது. அத்துடன் இந்த பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கு எந்த உணர்வுமில்லை.

பயிரிட வேண்டாம் என ஜனாதிபதி கூறுகிறார். மரவள்ளி கிழங்கை பயிரிடுமாறு பிரதமர் கூறுகிறார். கமத்தொழில் அமைச்சர் காடுகளில் உள்ள பலாக்காய்களை சாப்பிடுமாறு கூறுகிறார்.

இதனிடையே நாம் சாப்பிட வேண்டிய உணவுகளை வேளைகளை பற்றி பிரதமர் கூறுகிறார். நாம் தினமும் எத்தனை வேளை சாப்பிட வேண்டும் என்று முடிவு செய்ய நாட்டுக்கு பிரதமர் ஒருவர் தேவையில்லை எனவும் அனுரகுமார திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார். 

No comments

Powered by Blogger.