Header Ads



அமைச்சுப் பதவியை ஏற்றுக்கொள்ளத் தயார் - தம்மிக்க பெரேரா


அமைச்சுப் பதவியொன்று வழங்கப்பட்டால் அதனை ஏற்றுக்கொள்ளத் தயார் என பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.

சிங்கள தொலைக்காட்சி சேவையொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அமைச்சுப் பதவியானது இலாக அற்ற அமைச்சாக இருக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

டொலர்களை பெற்றுக்கொள்வதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒரு அமைச்சரை நியமித்து அவரிடம் 100 திட்டங்களை நடைமுறைப்படுத்தி மூன்று அல்லது ஆறு மாதங்களில் டொலர்களை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை எடுக்கும் பொறுப்பினை ஒப்படைக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.

அரசாங்க வருமானத்தை மேம்படுத்திக் கொள்வதற்கான 12 யோசனைகளையும் அவர் முன்மொழிந்துள்ளார்.

ஊழல் மோசடிகள் இடம்பெறுவதற்கு முன்னதாக அவற்றை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார். TW

1 comment:

  1. ஐக்கிய இராச்சியத்தில் உள்ள அரச மருத்துவசாலைகளின் பயங்கர கழிவுகள், கதிரியக்கத்தை ஏற்படுத்தும் கழிவுகளை ஒரு கன்டெய்னருக்கு வெறும் முந்நூறு டொலர்களுக்காக இலங்கைக்கு நூற்றுக்கணக்கான கென்டெய்னர்களை வரவழைத்து கட்டுநாயக்காவில் ஒரு காணியை வாங்கி அங்கு அந்த பயங்கர புற்றுநோய்களை ஏற்படுத்தும் கழிவுகளை கொண்டுவந்தவர் தான் இந்த தம்மிக பெரோரா, இவர் அதிகாரத்துக்கு வந்தால் அந்தக் கழிவுகள் இனி கன்டெய்னர்கள் ஆயிரக்கணக்கில் வரும். நாட்டின் இந்த துரோகிகளுக்கு யார் அரசியல் அதிகாரத்தை வழங்குகின்றார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.