Header Ads



குர்ஆனை கையில் ஏந்தியபடி, பதவியேற்ற 2 முஸ்லிம் அமைச்சர்கள் - ஆஸ்திரேலியாவில் வரலாற்றில் முதன்முறை


 ஆஸ்திரேலியா வரலாற்றில் முதன்முறையாக பிரதமர் ஆன்டனி ஆல்பனேசி அமைச்சரவையில் 13 பெண்கள் இடம்பிடித்து இருக்கிறார்கள். ஆஸ்திரேலியாவில் கடந்த மாதம் 21ம் தேதி நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் ஸ்காட் மாரிசன் தலைமையிலான ஆளுங்கட்சியை வீழ்த்தி, எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி ஆட்சியை பிடித்தது. புதிய பிரதமராக தலைவா் ஆன்டனி ஆல்பனேசி பதவியேற்றார். இந்த நிலையில் ஆன்டனி ஆல்பனேசி தலைமையிலான புதிய அமைச்சரவை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.

தலைநகர் கான்பெராவில் நடைபெற்ற விழாவில் புதிய அமைச்சர்கள் 30 பேருக்கு கவர்னர் ஜெனரல் டேவிட் ஹர்லி பதவி பிரமாணம் செய்து வைத்தார். ஆன்டனி ஆல்பனேசி தலைமையிலான அமைச்சரவையில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. 30 பேரை கொண்ட அமைச்சரவையில் 13 பேர் பெண்கள் ஆவர். ஆஸ்திரேலிய வரலாற்றில் அமைச்சரவையில் பெண்கள் அதிகளவில் இடம் பெறுவது இதுவே முதல்முறை.  வரலாற்றில் முதல்முறையாக 2 ஆஸ்திரேலிய அமைச்சரவையில் 2 இஸ்லாமிய சமூகத்தினர், பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணும் இடம் பிடித்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் வரலாற்றில் முதன்முறையாக குர்ஆனை கையில் ஏந்தியபடி 2 முஸ்லிம்  அமைச்சர்கள் பதவியேற்றது இதுவே முதன்முறையாகும்.



No comments

Powered by Blogger.