Header Ads



துயர்படும் 220 இலட்சம் மக்களின் பெயரால், சஜித்திடமிருந்து விசேட கோரிக்கை


24 மணி நேரமும் வரிசையில் நிற்கும் முச்சக்கர வண்டி சாரதிகளுக்காகவும், வாகனங்களில் சிரமப்படும் மக்களுக்காவும், பசியால் வரிசையில் வாடும் மக்களுக்காவும், வரிசையில் நின்று இறந்த அப்பாவி மக்களுக்காகவும்,ரயிலில் பயணித்த போது தவறி விழுந்து உயிரிழந்த அப்பாவி இளைஞருக்காகவும் அரசாங்கம்

இந்த கேடுகெட்ட வேலைத்திட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்து, மக்களை வாழ வைக்க அர்ப்பணிப்புடன் செயற்படும் அரசாங்கத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.

வரிசையில் நின்று அவதிப்படும் மக்களின் வலியையும்,வேதனைகளையும் புரிந்து கொள்ளாத ஆட்சியாளர்களின் பயணத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

வீட்டில் பசியால் வாடும் குழந்தைகளுக்கு உணவளிக்க முடியாமல் தவிக்கும் பெற்றோர்கள் சார்பாகவும், பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் கல்வியை இழந்து எதிர்காலம் குறித்து விரக்தியடைந்துள்ள இளைய தலைமுறையின் பெயரில் இந்நாட்டில் ஸ்திரத்தன்மை ஏற்பட வாய்ப்பளிக்கப்பட வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் கேட்டுக் கொண்டார்.

இந்நாட்டைச் சேர்ந்த இருபது இலட்சம் வெளிநாட்டு வாழ் மக்களுக்கு அழுத்தம், ஏமாற்றம் மற்றும் துன்பங்களை உரிமையாக்கிய இந்த ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான அரசாங்கம், தங்களுடைய திறமையற்ற தன்மை,

இயலாமை என்பனவற்றையே மீண்டும் மீண்டும் நிரூபிப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

கையாலாகாத,திறம்பட செயற்படத் தெரியாத அரசாங்கம்,நொடிக்கு நொடி மக்களை பழிவாங்குவதும்,சட்டியிலிருந்து அடுப்பிற்குள் தள்ளுவதையுமே மேற்கொண்டு வருவதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், உடனடியாக இந்த மோசடியான போலி ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து புதிய மக்கள் ஆணைக்கு அனுமதியளிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று (18) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

2 comments:

  1. statements doesn't bring benefits, should come out...

    ReplyDelete
  2. statements doesn't bring benefits, should come out...

    ReplyDelete

Powered by Blogger.