Header Ads



முஸ்லிம்கள் சார்பில் அரசியலமைப்பின் 21 ஆவது, திருத்தத்திற்கு 4 யோசனைகள் முன்வைப்பு


நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கு ஸ்திரமான அரசியல் சூழ்நிலை அவசியமென தெரிவித்துள்ள நீதி அமைச்சர் விஜேயதாச ராஜபக்‌ஷ, அதற்காக 21 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை விரைவில் நிறைவேற்ற வேண்டியது அவசியமென்றும் தெரிவித்துள்ளார்.

உத்தேச 21ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் கருத்துக்கள் மற்றும் யோசனைகளை பெற்றுக்கொள்ளும் வகையில் முஸ்லிம் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், பாராளுமன்ற அங்கத்துவமற்ற சிறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் நீதியமைச்சர் விஜேயதாச ராஜபக்‌ஷவுக்குமிடையில் நேற்று விசேட சந்திப்பொன்று நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நீதி அமைச்சில் நடைபெற்ற இச் சந்திப்பின்போது 21ஆவது அரசியலமைப்பு திருத்தம் மற்றும் நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பில் நீதி அமைச்சரினால் மேற்படி அமைப்புகளுக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அரசியலமைப்பு திருத்த சட்ட மூலத்துக்கான கருத்துக்களும் இதன்போது முன்வைக்கப்பட்டன.

 மேற்படி அமைப்புகள் வழங்கியுள்ள சிறந்த யோசனைகளை அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டுவருவதாக நீதி அமைச்சர் விஜேயதாச ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் தொடர்பில் மகாநாயக்க தேரர்களுக்கும் தெளிவுபடுத்தியுள்ளதாக அமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்த முஸ்லிம் சிவில் சமூகத்தின் செயற்பாட்டாளர் சட்டத்தரணி ஜாவிட் யூசுப் 21ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான சட்ட மூலத்துக்கு நான்கு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.


லோரன்ஸ் செல்வநாயகம்



No comments

Powered by Blogger.